SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரூ. 20 கோடி டிரேடிங் ஆசை... ஹர்திக் பாண்டியா மீது பிசிசிஐ அதிருப்தி? முழு விவரம்

ஐபிஎல் 2027-க்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் இருக்க ஹர்திக் பாண்டியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Written By R Balaji
Published: Oct 24, 2026, 09:01 AM IST | Updated: Oct 24, 2026, 09:07 AM IST
Join

2027 ஐபிஎல் சீசனை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் வாங்குவதற்கு சில அணிகள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது காயம் தொடர்பான கவலைகள் மற்றும் உடற்தகுதி குறித்த கேள்விகளால்,அவரை ஒப்பந்தம் செய்வதில் அணிகள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹர்திக்கை வாங்குவதற்காக அதிக தொகையை செலவிடுவது அல்லது அணியில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை மாற்றாக வாங்குவது குறித்து மற்ற அணி நிர்வாகங்கள் கவனமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், தனது டிரேடிங் மதிப்பை உயர்த்தும் நோக்கில் ஹர்திக் புதிய திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2027 ஐபிஎல் மட்டுமே இலக்கு?

2027 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக முழுமையான உடற்தகுதியை பெறுவதற்கும், தீவிர பயிற்சியில் ஈடுபடுவதற்கும் ஹர்திக் பாண்டியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, அதற்கு முன்பாக நடைபெறும் பிற கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்க அவர் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவின் மூலம் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி தனது திறமையை வெளிப்படுத்த முடியும் என்பது அவரது திட்டமாக கூறப்படுகிறது. இதனால் அவரை வாங்குவதற்கான போட்டி மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், அவரது டிரேடிங் மதிப்பு ரூ. 20 கோடி வரை செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹர்திக்கை வாங்க ஆர்வம் காட்டும் அணிகள்

ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்குள் கொண்டுவர ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் ஆர்வம் காடி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, அந்த அணியின் முக்கிய வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை மாற்றாக வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் ஹர்திக்கை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ஸ்வாலை தனது அணிக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹர்திக் முடிவால் பிசிசிஐ அதிருப்தி?

ஹதிக் பாண்டியா உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காமல் நேரடியாக ஜபிஎல் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல் பிசிசிஐ வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. அவரது காயம் முழுமையாக குணமடைந்து, மீண்டும் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெறுவதற்கு சுமார் 30 முதல் 40 நாட்கள் தேவைப்படலாம். இதனால் அவர் முழு உடற்தகுதியை பெற்ற பின்னர் உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் அட்டவணையின்படி, விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபி போன்ற தொடர்களில் பங்கேற்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. மேலும், டிசம்பரில் இலங்கை அணிக்கு எதிரான தொடரும் இருப்பதாக கூறப்படுகிறது.

பிசிசிஐ விதிமுறைகள் என்ன சொல்கிறது?

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் மற்றும் முழு உடற்தகுதியுடன் இருக்கும் வீரர்கள் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக பிசிசிஐ அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இதற்கு முன்பு ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களும் உள்நாட்டு போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா மட்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னுரிமை அளித்தால், மற்ற வீரர்களும் இதே அணுகுமுறையைப் பின்பற்றக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஹர்திக் முழுமையான உடற்தகுதியைப் பெற்றதும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கை அணிக்கு எதிரான தொடர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கச் செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை, இந்தப் போட்டிகளில் விளையாட முடியாது என ஹர்திக் மறுத்தால், அதற்கான காரணத்தை பிசிசிஐயிடம் விளக்க வேண்டிய நிலை ஏற்படலாம். உரிய காரணமின்றி அவர் போட்டிகளில் பங்கேற்க மறுத்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES