SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இந்திய அணி இதை செய்யாவிட்டால் தோற்க அதிக வாய்ப்பு... எச்சரிக்கும் மூத்த வீரர்

India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இதை செய்தால்தான் வெற்றிபெற முடியும் என்றும்; இல்லையெனில் தோல்வியடையவும் வாய்ப்புள்ளது என்றும் மூத்த இந்திய வீரர் தெரிவித்துள்ளார்.

Written By Sudharsan G
Published: Aug 18, 2026, 08:28 AM IST | Updated: Aug 18, 2026, 08:32 AM IST
Join

India vs Sri Lanka 1st Test : இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் மழையின் குறுக்கீடு காரணமாக பல ஓவர்கள் வீசப்படவில்லை.

மூன்று நாள்களில் குறைந்தபட்சம் 270 ஓவர்கள் வீசப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸை மட்டுமே விளையாடி உள்ளன. மொத்தமே 196.2 ஓவர்களே வீசப்பட்டுள்ளது. இன்றுமே மழைக்கு சிறிது வாய்ப்பு இருக்கும் காரணத்தால் போட்டியின் முடிவு மழையின் கையிலேயே இருக்கிறது.

இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட்

ஏன் இது முக்கிய போட்டி?

இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போட்டி தொடங்கியது.

2017ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி இலங்கையில் விளையாடும் முதல் டெஸ்ட் மற்றும் இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் இது 600வது போட்டி என்பதால் அனைவருக்குமே இந்த முதல் டெஸ்ட் போட்டி சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது.

462 ரன்களை குவித்த இந்திய அணி

இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சுமார் இரண்டு நாட்களுக்கு முழுமையாக பேட்டிங் செய்தது. இந்திய அணி நேற்றைய (ஆகஸ்ட் 17) மூன்றாவது நாள் ஆட்டத்தில்தான் ஆல்-அவுட்டானது. 116.4 ஓவர்களில் 462 ரன்களை இந்திய அணி அடித்தது.

தேவ்தத் படிக்கல் 167, கேஎல் ராகுல 82, துருவ் ஜூரேல் 51 , ரிஷப் பண்ட் 39, ஜெய்ஸ்வால் 32 என ரன்களை குவித்தது. இலங்கை பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா 4, கெஷார ஜெயசூர்யா 3, அஷிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

இலங்கையை காப்பாற்றிய ஜோடி

அதேநேரத்தில் நேற்றைய தினம் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி 79.4 ஓவர்களில் 284 ரன்களை அடித்து ஆல்-அவுட்டானது. சோனல் தினுஷா 100, நிரோஷன் டிக்வெல்லா 80 ஆகியோர் மட்டுமே சோபித்தனர். இந்த ஜோடி 146 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்ததும் குறிப்பிடத்தக்கது.

178 ரன்கள் முன்னிலை

இந்திய அணி பந்துவீச்சில் மானவ் சுதார் 4, ரவீந்திர ஜடேஜா 3, குல்தீப், சிராஜ், பிரசித் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 178 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. இலங்கை பேட்டிங் முடிந்த சிறிது நேரத்திலேயே மழை குறுக்கிட்டதால், நேற்றைய ஆட்டம் சற்று முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதம் உள்ளன.

ஆகாஷ் சோப்ரா சொல்லும் ஐடியா

இந்நிலையில், இந்திய அணி இன்று துணிந்து விளையாடி அதிரடியாக ரன்களை குவித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்றும் இல்லாவிட்டால் இந்திய அணி தோல்வியடையவும் வாய்ப்புள்ளதாகவும் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா அவரது யூ-ட்யூப் சேனலில் பேசியதாவது, "தற்போது 178 ரன்கள் முன்னிலையில் உள்ளது, இன்னும் 178 ரன்களை சேர்த்தால் 350 ரன்களை தாண்டிவிடலாம். ஓவருக்கு 5 ரன்கள் என்ற வீதத்தில் விளையாடினாலேயே 40 ஓவர்களுக்கு 200 ரன்களை சேர்த்துவிட முடியும். ஏற்கெனவே மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.

எனவே, நீங்கள் வேகமாகவும், அதிரடியாகவும் விளையாடியாக வேண்டும். ஜெய்ஸ்வால் போன்றவர்கள் அவர்களின் இயல்பான அதிரடியை கைக்கொள்ள வேண்டும். கேஎல் ராகுலுக்கு பல கியர்கள் இருக்கிறது, இந்த நேரத்தில் டி20ஐ மற்றும் ஓடிஐ கியருக்கு போக வேண்டும்" என அறிவுறுத்தி உள்ளார்.

இலங்கைக்கும் வாய்ப்பு இருக்கு...

பேட்டிங் டெப்த் நன்றாகவே உள்ளது, எனவே விரைவாக விளையாடுவது அவசியம். இந்தியாவுக்கு 40 ஓவர்களைதான் நான் கொடுப்பேன். அதற்குள் 150 முதல் 170 ரன்களை அடித்து டிக்ளர் செய்துவிட வேண்டும். எனக்கு புரிகிறது, இந்தியா விிளையாடி பின்னர் இன்று மீதம் இருக்கும் 50 ஓவர்கள், நாளைய 90 ஓவர்கள் என 140 ஓவர்கள் நாம் தோற்க நேரிடலாம் என்பது நமக்கு தெரியும்.

முழு ஆட்டமும் நடந்து, நம்மால் அவர்களை ஆல்-அவுட் செய்ய முடியாவிட்டால், 350 ரன்கள் எடுப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்கும். இருப்பினும் நாம் நீண்ட நேரம் பேட் செய்து, மழையால் ஒரு செஷன் தடைபட்டால் நாம் கையேந்தி நிற்க வேண்டியிருக்கும். இது ஒரு கடினமான போட்டியாக இருக்கப்போகிறது. ஆனால் இதைதான் இந்தியா எதிர்கொண்டே ஆக வேண்டும்" என்றார்.

இன்று ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.45 மணிக்கு தொடங்கும். அதாவது 10 மணிக்கு தொடங்கும் ஆட்டம் கால்மணி நேரம் முன்கூட்டியே தொடங்குகிறது. இந்திய அணி எப்படி இரண்டாவது இன்னிங்ஸை கட்டமைக்க போகிறது என்பதை பார்க்க ஆர்வம் அதிகரித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES