உலகக் கோப்பை அணியில் சூர்யவன்ஷி...?! மூத்த இந்திய வீரரின் Bomb Squad
2027 ஐசிசி உலகக் கோப்பை தொடரில் யார் யார் இடம்பெற்றால் இந்திய அணி பலமாக இருக்கும் என மூத்த இந்திய வீரர் ராபின் உத்தப்பா சில பரிந்துரைகளை வழங்கி உள்ளார். அவர் தனது ஸ்குவாடிற்கு Bomb Squad என பெயர் வைத்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம்.
2027 ஐசிசி உலகக் கோப்பை தொடர் அடுத்தாண்டு நடைபெற இருக்கிறது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
3 நாடுகளில் 2027 உலகக் கோப்பை
தென்னாப்பிரிக்காவில் ஜொகன்னஸ்பெர்க், சென்சூரியன், கேப் டவுன், டர்பன், போர்ட் எலிசெபத், ப்ளூம்ஃபோன்டைன், பார்ல், குக்கோம்போ நகரம்; ஜிம்பாப்வே ஹரேரா, புலவாயோ, விக்டோரியா பால்ஸ்; நமீபியாவில் விண்ட்ஹோக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற இருக்கிறது.
ஏன் இது இந்தியாவுக்கு முக்கிய தொடர்...?
2027 ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்ற இந்திய அணி துடிதுடியாய் துடித்து வருகிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டில்தான் இந்திய அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் 2015, 2019 ஆகிய தொடர்களில் அரையிறுதியில் தோற்ற இந்திய அணி, கடந்த 2023 உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக வென்று, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது.
Robin Uthappa’s Team India Squad for the ODI World Cup 2027.
Uthappa has picked Vaibhav Suryavanshi, Sanju Samson, Bhuvneshwar Kumar and Arshdeep Singh, while leaving out Yashasvi Jaiswal, Ishan Kishan and Harshit Rana.
Squad: Rohit Sharma, Shubman, Vaibhav Suryavanshi, Virat…— Sonu (@Cricket_live247
எனவே, ஜஸ்ட் மிஸ்ஸில் ஐசிசி உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணிக்கு 2027 உலகக் கோப்பை தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னுமொரு முக்கிய காரணம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர்தான்.
இவர்கள் தற்போது ஓடிஐ போட்டிகளில் மட்டும்தான் விளையாடி வருகிறார்கள். அதனால் கண்டிப்பாக 2027 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராபின் உத்தப்பாவின் மிரட்டல் பரிந்துரை
அந்த வகையில், ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்ற இந்திய அணி சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் இப்போத வரத்தொடங்கி உள்ளன. அந்த வகையில், ஐசிசி உலகக் கோப்பை தொடரில் எந்தெந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என மூத்த இந்திய அணி வீரர் ராபின் உத்தப்பா தனது ஸ்குவாடை அறிவித்துள்ளார்.
ராபின் உத்தப்பா தனது ஸ்குவாடில் 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். மேலும் இந்த ஸ்குவாடுக்கு அவர் Bomb Squad என்றும் பெயரிட்டுள்ளார். அந்த வகையில் ராபின் உத்தப்பா தேர்வு செய்து பரிந்துரைக்கும் வீரர்கள் யார் யார்?, அவர்கள் ஏன் தேர்வு செய்யப்பட வேண்டும்? யார் யாரை தவிர்த்திருக்கிறார்? என்பதை இங்கு காணலாம்.
பேட்டர்கள் யார் யாருக்கு வாய்ப்பு?
சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகிய பேட்டர்கள் வேண்டும் என ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார். அதேநேரத்தில் ரோஹித் சர்மாவுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் பேக்அப் வீரராக வைபவ் சூர்யவன்ஷியை தேர்வுசெய்து, யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அவர் புறக்கணித்துள்ளார் வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா ஆகியோரையும் அவர் தவறிட்டிருக்கிறார்.
சஞ்சு சாம்சன் பேக்அப்
ரவிந்திர ஜடேஜாவை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் விக்கெட் கீப்பர் பேட்டரில் பேக்அப் வீரராக சஞ்சு சாம்சனை அவர் தேர்வு செய்துள்ளார். இஷான் கிஷனுக்கு இடமில்லை.
பேக்-அப்பே இல்லை...
ஹர்திக் பாண்டியா நிச்சயம் தேவை என குறிப்பிட்டுள்ள உத்தப்பா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் தூபே ஆகிய வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் யாரையும் அவர் தேர்வுசெய்யப்படவில்லை.
வேகப்பந்துவீச்சில் யார் யார்?
அதேநேரத்தில், 28 விக்கெட்டுகளை கடந்த ஐபிஎல் தொடரில் கைப்பற்றிய புவனேஷ்வர் குமாரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை உத்தப்பா தேர்வு செய்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஸ்குவாட் (ராபின் உத்தப்பா கணிப்பு): சுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
விடுபட்ட வீரர்களின் பட்டியல்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், நிதிஷ் குமார், சிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா.