SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வலியில் துடித்த கேஎல் ராகுல்... உடற்தகுதி எப்படி இருக்கு...? இன்று விளையாடுவாரா?

IND vs SL: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாளான நேற்று, கேஎல் ராகுல் காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்நிலையில், அவர் இன்று விளையாடுவாரா...? அவரின் உடற்தகுதி எப்படி உள்ளது...? என்பதை இந்திய அணி பயிற்சியாளர் விளக்கி உள்ளார்.

Written By Sudharsan G
Published: Aug 16, 2026, 07:06 AM IST | Updated: Aug 16, 2026, 07:15 AM IST
Join

IND vs SL, KL Rahul Injury Update: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 15) தொடங்கியது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் இந்திய அணிக்கு மிக முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது. ஐசிசி WTC தொடரில் இந்த போட்டியுடன் மொத்தம் 9 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

மிக முக்கிய போட்டி

9 போட்டிகளில் ஒரு போட்டிகளில் தோற்காமல் இருந்தால்தான் WTC இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில், முக்கியத்துவம் வாய்ந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்களை செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜூன் மாதம் விளையாடியே அதே அணிதான் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் காம்பினேஷன்

காயமடைந்த சாய் சுதர்சனுக்கு பதில் தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டிருந்தார். ஜடேஜா - மானவ் சுதார் - குல்தீப் யாதவ் என மூன்று இடது கை சுழற்பந்துவீச்சாளர்கள் விளையாடுகின்றனர்.

இதில் முதல் இருவர் ஆர்த்தடாக்ஸ் ஃபிங்கர் ஸ்பின்னர்கள் ஆவர், குல்தீப் சைனாமேன் மணிக்கட்டு ஸ்பின்னர் ஆவார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா வேகப்பந்துவீச்சை கவனித்துக்கொள்வார்கள். நம்பர் 6 இடத்தில் துருவ் ஜூரேலுககு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய அணி அபார ஆட்டம்

இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் இது 600வது போட்டியாகும். போட்டியின் டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் நாள் ஆட்டநேர முடிவில் (73 ஓவர்கள்) 2 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை இந்திய அணி எடுத்தது. மழை குறுக்கீடு காரணமாக ஒரு மணிநேரத்திற்கு மேலாக ஆட்டம் தடைபட்டதால், குறைவான ஓவர்களே நேற்று வீசப்பட்டன.

தேவ்தத் படிக்கல் சதம்

இந்திய அணி பேட்டிங்கை பொறுத்தவரை தேவ்தத் படிக்கல் 131 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  ஓபனிங்கில் அதிரடியாக ரன்களை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்களில் துரதிருஷ்ட வசமாக ரன் அவுட்டானார். கேப்டன் சுப்மான் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரபாத் ஜெயசூர்யா மட்டுமே 1 விக்கெட்டை எடுத்தார்.

கேஎல் ராகுலுக்கு காயம்

இதில் 77 ரன்களை எடுத்த ஓபனர் கேஎல் ராகுலுக்கு திடீரென களத்தில் தசைபிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக், நேற்றைய ஆட்டத்திற்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் முக்கிய அப்டேட்டை தெரிவித்தார்.

மீண்டும் களமிறங்கும் கேஎல் ராகுல்

கேஎல் ராகுல் நன்றாக பேட்டிங் செய்துவந்தார். தசைபிடிப்பே அவருக்கு ஏற்பட்டது என நினைக்கிறேன். ஆனால், இப்போது அவர் சிறப்பாக இருக்கிறார்.

ஒருவேளை உங்களுக்கு தசைபிடிப்பு ஏற்பட தொடங்கினால், அது தொடையின் பின்பகுதியில் ஏற்படும், இடுப்புப் பகுதியில் வரும் அல்லது உங்கள் கையில் கூட வரலாம். ஆனால் இப்போதைக்கு அவர் சிறப்பாக உள்ளார், நாளை (அதாவது இன்று) அவர் விளையாடுவதில் சிக்கல் இல்லை" என்றார்.

படிக்கட்டுகளை ஏறவே சிரமப்பட்டார்

தொலைக்காட்சி நேரலையில் போட்டியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும், கேஎல் ராகுல் கடுமையான வலியால் துடித்தார். டிரெஸ்ஸிங் ரூமுக்குச் செல்ல படிக்கட்டுகளை ஏற வேண்டியிருந்தது.

அவர் படிக்கட்டுகளில் ஏற சிரமப்பட்டார். இந்திய அணியின் பிஸியோ கமலேஷ் ஜெயினின் உதவியுடன்தான் அவர் படிக்கட்டுகளை நிதானமாக ஏறினார். இருப்பினும் தற்போது உடற்தகுதிபெற்றிருப்பதன் மூலம் அவர் எப்போது வேண்டுமானாலும் இன்று களமிறங்கலாம்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES