SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CSK வரும் ரபாடா? கூடவே ஒரு தமிழக வீரர்.. குஜராத் செல்லும் ருதுராஜ் - பெரிய முடிவு!

CSK Trade Latest Update: சிஎஸ்கே அணியிடம் குஜராத் அணி ககிசோ ரபாடா உடன் ஒரு தமிழக வீரரையும் தருகிறோம்; எங்களுக்கு ருதுராஜ் கெய்க்வாட்டை தாருங்கள் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளதாம். அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Written By R Balaji
Published: Nov 02, 2026, 10:24 AM IST | Updated: Nov 02, 2026, 10:27 AM IST
Join

2027 ஐபிஎல் தொடருக்கான பேச்சுவார்த்தை நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகின்றன. டிரேடிங் நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால், தங்களுக்கு தேவையான வீரர்களை மற்ற அணிகளிடம் இருந்து பெறுவதற்கு அனைத்து அணிகளும் முயற்சி செய்து வருகின்றன.

CSK-வின் முக்கிய இலக்கு

ரவீந்திர ஜடேஜா அணியில் இருந்து வெளியேற பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டருக்கான இடம் சரியான முறையில் நிரப்பப்படவில்லை. கடந்த சீசனிலும் அந்த பொறுப்புக்கு பொருத்தமான வீரர் இல்லாமலேயே சிஎஸ்கே களமிறங்கியது. எனவே, 2027 சீசனுக்கு முன்பாக இந்த குறையை சரி செய்ய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த அணியில் சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், மனவ் சுதார், ராகுல் தேவத்தியா, ரஷித் கான் என பல சுழற்பந்து வீச்சாளர் இருப்பதால், அவர்களில் ஒருவரை டிரேடிங் மூலம் பெற சிஎஸ்கே முயற்சித்து வருகிறது. குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோர் ஆகிய இருவரில் ஒருவரை தங்களுக்கு கொடுக்குமாறு குஜராத் அணியிடம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

குஜராத் அணி வைத்த நிபந்தனை

இதற்கு பதிலளித்துள்ள குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம்,சாய் கிஷோர் மற்றும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா ஆகிய இருவரையும் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு பதிலாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை தங்களுக்கு தர வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ருதுராஜ் கெய்க்வாட்டை ஏன் கேட்கிறது குஜராத்?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்களான சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்களை சார்ந்தே பேட்டிங் வரிசை இருந்து வருகிறது. மிடில் ஆர்டரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர் தேவைப்படுவதால், ருதுராஜ் கெய்க்வாட்டை குறிவைத்துள்ளதாக தெரிகிறது.

தொடக்கத்தில் நிதானமாக விளையாடி, ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப அதிரடிக்கு மாறக்கூடிய திறன் ருதுராஜிடம் உள்ளது. குறிப்பாக மூன்றாவது இடத்தில் களமிறங்கினாலும் அணிக்கு நல்ல பங்களிப்பை வழங்கக்கூடியவர். இதனாலேயே அவரை தங்கள் அணிக்கு கொண்டுவர குஜராத் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்த டிரேட் சிஎஸ்கேவுக்கு லாபமா?

மறுபுறம், ருதுராஜ் கெய்க்வாட்டை விடுவித்தால் அவருக்கு பதிலாக உர்வில் படேலை அணியின் பிளேயிங் லெவனில் பயன்படுத்தலாம் என சிஎஸ்கே நிர்வாகம் கருத வாய்ப்புள்ளது. அதேசமயம், ருதுராஜுக்கு பதிலாக தரமான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளருமான ரபாடாவும் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இருப்பினும், அணியின் கேப்டனாகவும் முக்கிய பேட்டராகவும் இருக்கும் ருதுராஜை விடுவிப்பது சிஎஸ்கேவுக்கு எளிதான முடிவாக இருக்காது. எனவே, குஜராத் முன்வைத்துள்ள இந்தப் நிபந்தனையை சிஎஸ்கே ஏற்றுக்கொள்ளுமா அல்லது நிராகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஹர்திக் பாண்டியா விவகாரத்திலும் சிக்கல்!

இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கும் சிஎஸ்கே முயற்சி செய்து வந்தது. ஆனால், அவருக்கான தேவை மற்ற அணிகளிடையே அதிகரித்ததைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தனது நிபந்தனைகளை கடுமையாக்கியுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக, ஹர்திக்கை விடுவிக்க வேண்டுமென்றால் சிஎஸ்கேவிடம் இருந்து மூன்று வீரர்களைத் தர வேண்டும் என மும்பை நிர்வாகம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த சிஎஸ்கே, இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டாம் என முடிவெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்க்க டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இந்தப் போட்டியில் ஆர்வம் காட்டிய நிலையில், அந்த அணிக்கு செல்ல விருப்பமில்லை என ஹர்திக் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் லக்னோ அணி இந்த முயற்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES