MS Dhoni, IPL 2027: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி, வரும் 2027 ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து நீண்ட நாளுக்கு பின் மௌனம் கலைத்துள்ளார்.
பெங்களூருவில் நடந்த ஹெல்த்கேர் சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற தோனியிடம், அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஐபிஎல் 2027 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவீர்களா என மருத்துவர் ஒருவர் மேடையில் இந்த கேள்வியை எழுப்பினார்.
அதற்கு தோனி அவரது பாணியிலேயே நகைச்சுவையாக, "டாக்டர் நான் அந்த பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். நீங்கள் எனக்கு அந்த பரிசோதனை அறிக்கையை தர வேண்டும். அதன் பிறகு, டிசம்பருக்கு முன்பாக, இன்னும் ஒரு சீசன் விளையாடுவதற்கு நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதை பார்க்க வேண்டும்.
#WATCH | Bengaluru, Karnataka | On his IPL future, Former Indian Cricket Team Captain Mahendra Singh Dhoni says, "I'll have to go through the tests. You'll have to give me the report, and before December, I'll need to assess how strong I am and whether I can play one more season. If I'm not fit enough, then you'll have to make sure you do everything right to get this old vintage vehicle running smoothly on the road..." (24.10)
— ANI (@ANI) October 24, 2026
ஒருவேளை நான் அப்படி இல்லையென்றால், நீங்கள் என்னிடம் எல்லாவற்றையும் சரியாகச் செய்து, இந்தப் பழைய வாகனம் சாலையில் நன்றாக ஓடுவதையும் உறுதி செய்ய வேண்டும். அதனால் எல்லா அழுத்தமும் அவர்களின் (மருத்துவர்கள்)மீதுதான்..." என்றார்.
இதன்மூலம், உடற்தகுதி இருக்கும்பட்சத்தில் தோனி மீண்டும் ஒரு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தோனியின் பதிலை கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.