SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரிஷப் பண்ட் விலகல்... நியூசிலாந்து போகும் வேறு விக்கெட் கீப்பர் - என்னாச்சு?

Rishabh Pant Injury: இடது பக்க தசைப்பிடிப்பு காரணமாக, நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் இருந்து ரிஷப் பண்ட் விலகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பதில் மாற்று வீரரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Written By Sudharsan G
Published: Oct 12, 2026, 09:13 PM IST | Updated: Oct 12, 2026, 09:19 PM IST
Join

Rishabh Pant Injury Updates: இந்திய அணி தற்போதைய மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரான டி20ஐ தொடரை நிறைவு செய்து, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

அக். 22ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 டி20ஐ போட்டிகள், 5 ஓடிஐ போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

மேலும் படிக்க | கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் விலகல்? CSK-வின் அடுத்த தலைமை யார்...?

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ தொடர்

இதற்கு இடையே இந்தியா ஏ அணியும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையே மூன்று அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதிவரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது.

நவம்பர் 19ஆம் தேதி தொடங்கும் இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஒரு முன்னோட்டமாக இந்த சிவப்பு பந்து தொடர் அமைந்திருக்கிறது. இந்திய அணியில் தற்போது பலரும் நியூசிலாந்து மண்ணில் விளையாடியவர்கள் இல்லை என்பதால், சூழலை புரிந்துகொள்வதற்கு இந்த 'ஏ' சீரிஸ் இந்திய வீரர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்தியா ஏ ஸ்குவாட் விவரம்

துருவ் ஜூரேல் தலைமையிலான 15 வீரர்கள் அடங்கிய இந்தியா ஏ ஸ்குவாடை பிசிசிஐ அறிவித்திருந்தது.

பேட்டர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், யாஷ் ரத்தோட், தேவ்தத் படிக்கல், ஸ்மரன் ரவிசந்திரன்.

விக்கெட் கீப்பர்கள்: துருவ் ஜூரேல் (கேப்டன்), கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்.

சுழற்பந்துவீச்சாளர்கள்: மானவ் சுதார், வாஷிங்டன் சுந்தர்.

வேகப்பந்துவீச்சாளர்கள்: ஆகிப் நபி, ஆகாஷ் தீப், அன்சுல் கம்போஜ், முகேஷ் குமார், முகேஷ் சௌத்ரி.

மேலும் படிக்க | Explainer: சிஎஸ்கேவை மீண்டும் சாம்பியனாக்க ஜாகீர் கான் செய்ய வேண்டிய 3 முக்கிய மாற்றங்கள்!

காயத்தால் ரிஷப் பண்ட் விலகல்

இந்நிலையில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதலிரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதிவரை ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக நடந்த இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை ரிஷப் பண்ட் வழிநடத்தியிருந்தார். அந்த தொடரில் வருக்கு இடது பக்கத்தில் தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடருக்கு அவர் தேர்வு செய்யப்பட்ட போதே, உடற்தகுதி இருந்தால் மட்டுமே விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உடற்தகுதி இன்னும் முன்னேற்றம் காணாத நிலையில் முதலிரண்டு போட்டிகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

3வது போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா என்பதும் அவர் உடற்தகுதியை பொறுத்தே அமையும். அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் உடற்தகுதியை மீட்டெடுக்கும் செயல்பாட்டில் ஈடுபடுவார் என தெரிகிறது.

ரிஷப் பண்ட் தற்சமயம் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அவர் ஓடிஐ, டி20ஐ போட்டிகளில் கடைசியாக 2024ஆம் ஆண்டில் விளையாடியிருந்தார். எனவே, அவர் உடற்தகுதி பெற்றால் மட்டுமே நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படுவார்.

ரிஷப் பண்டுக்கு மாற்று வீரர் யார்?

ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டரான குமார் குஷாக்ரா மாற்று வீரராக தேர்வாகி உள்ளார். இவர் துலீப் டிராபி இறுதிப்போட்டியிலும், சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியிலும் அடுத்தடுத்து சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஷாய் ஹோப்பை கொத்தித் தூக்க காத்திருக்கும் 4 அணிகள்... ஐபிஎல் ஏலம் கணக்கு - Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES