• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /ஷாய் ஹோப்பை கொத்தித் தூக்க காத்திருக்கும் 4 அணிகள்... ஐபிஎல் ஏலம் கணக்கு - Explained

ஷாய் ஹோப்பை கொத்தித் தூக்க காத்திருக்கும் 4 அணிகள்... ஐபிஎல் ஏலம் கணக்கு - Explained

IPL 2027 Mini Auction: இந்திய தொடரில் 320 ரன்கள் குவித்து மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப். ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் அவரை போட்டிபோட்டு வாங்க துடிக்கும் 4 முக்கிய அணிகள் எவை? என்பதை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Oct 12, 2026, 12:23 AM IST|Updated: Oct 12, 2026, 12:50 AM IST
joinshare
ஷாய் ஹோப்பை கொத்தித் தூக்க காத்திருக்கும் 4 அணிகள்... ஐபிஎல் ஏலம் கணக்கு - Explained
Image Credit: Shai Hope IPL 2027 | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ஷாய் ஹோப்பை கொத்தித் தூக்க காத்திருக்கும் 4 அணிகள்... ஐபிஎல் ஏலம் கணக்கு - Explained

ஷாய் ஹோப்பை கொத்தித் தூக்க காத்திருக்கும் 4 அணிகள்... ஐபிஎல் ஏலம் கணக்கு - Explained

2

ராணுவ பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்க விருப்பமா? அரசின் முக்கிய அறிவிப்பு

3

TNPSC குரூப் 4 அறிவிப்பு எதிரொலி: இலவசப் பயிற்சி அளிக்க பயிற்றுநர்கள் தேர்வு!

4

விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு! பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 வரும் தேதி

5

பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் மாணவிகள்... கிராமங்களில் நிலை மோசம்.. ஷாக் ரிப்போர்ட்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

IPL 2027 Mini Auction: சர்வதேச வொயிட் பால் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக மிகச் சிறந்த ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது டி20ஐ நிறைவடைந்திருக்கிறது. இந்தியாவுக்கு வந்து கடந்த 6 இன்னிங்ஸில் 12, 104, 162*, 52, 102*, 5 என 320 ரன்களை குவித்திருக்கிறார்.

டிசம்பரில் வரும் ஐபிஎல் 2027 தொடருக்கான மினி ஏலம் நடைபெற இருப்பதை ஒட்டி,  ஷாய் ஹோப்பின் ஆட்டம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ஷாய் ஹோப்பை பெற எந்தெந்த அணிகள் முட்டிமோதும் என்பதை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

ஷாய் ஹோப் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

  • ஷாய் ஹோப் வழக்கமாகவே ஒரு இன்னிங்ஸை நிதானமாக கட்டமைக்கும் நம்பத்தகுந்த டாப்-ஆர்டர் பேட்டராகவும், விக்கெட் கீப்பர் பேட்டராகவும் அறியப்பட்டார். இவரை எடுக்க சிஎஸ்கே பல ஆண்டுகளுக்கு பின் முயற்சித்தது.
  • தற்போதைய இந்திய சுற்றுப்பயணத்தில் அவர் வெளிப்படுத்தி வரும் ஆக்ரோஷமான மற்றும் பொறுப்பான ஆட்டம் பல ஐபிஎல் அணிகளை புருவம் உயர்த்த வைத்துள்ளது.
  • டி20 கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரர்கள் நிறைந்திருந்தாலும், ஒரு முனையில் விக்கெட் சரியாமல் அணியை வழிநடத்தும் ஆங்கர் வீரரின் தேவை பல அணிகளுக்கு தற்போது எழுந்திருக்கிறது.
  • எனவே, ஓபனர் அல்லது நம்பர் 3 பேட்டராக களமிறக்க ஷாய் ஹோப் தரமான வீரர் என்பதால் அவரை ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் தட்டித்தூக்க போட்டாப்போட்டி நடக்கும்.

ஐபிஎல் தொடரில் ஷாய் ஹோப்

  • ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, ஷாய் ஹோப் 2024 சீசனில் மட்டுமே விளையாடியிருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 183 ரன்களை அடித்திருந்தார். அதன் பின் அவர் விளையாடவில்லை.
  • 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு டெல்லி அணி அவரை விடுவித்தது. அதன் பின் யாரும் அவரை எடுக்கவில்லை. கடந்தாண்டு ரூ.2 கோடி அடிப்படைத் தொகையில் பதிவு செய்திருந்த அவரை எந்த அணியும் சீண்டவில்லை.
  • தற்போது அதே ரூ.2 கோடி அடிப்படை தொகையில் வெளிநாட்டு விக்கெட் கீப்பர் பேட்டராக வரும் ஷாய் ஹோப்பை இந்த அணிகள் எடுக்க அதிக வாய்ப்புள்ளது.

குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது டாப்-ஆர்டர் வரிசையை மேலும் வலுப்படுத்த ஷாய் ஹோப்பை குறிவைக்கலாம் என கிரிக்கெட் வர்ணனையாளரான ஆகாஷ் சோப்ரா போன்ற வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா KKR அணிக்கு மாறுகிறாரா? கேப்டன்சி முதல் மிடில் ஆர்டர் வரை.. என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?

நெருக்கடியான தருணங்களிலும் பதற்றமின்றி நிதானமாக முடிவெடுக்கும் அவரது பாணியும், சமீபத்திய போட்டிகளில் அவர் வெளிப்படுத்திய தொடர்ச்சியான ரன் குவிக்கும் பார்மும் குஜராத் அணிக்கு சிறந்த பேலன்ஸைத் தரும்.

ஜாஸ் பட்லருக்கு பேக்-அப்பாக அவரை பயன்படுத்தலாம். குஜராத் அணி சூழலுக்கு அவர் பெரிதும் கைக்கொடுப்பார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

லக்னோ அணியை பொறுத்தவரை வீரர்களை தக்கவைக்கும் உத்திகளுக்கு பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் தேவைப்படலாம்.

ஏற்கெனவே டாப் ஆர்டரில் மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், மேத்யூ பிரீட்ஸ்கே என பல வெளிநாட்டு வீரர்கள் இருந்தாலும், ஒருவேளை இவர்களில் ஓரிரு வீரர்களை கழட்டிவிடும்பட்சத்தில் குறைந்த தொகையில் ஷாய் ஹோப்பை எடுக்கலாம்.

டெல்லி கேப்பிடல்ஸ்

இந்தாண்டு டெல்லி அணயில் உரிமையாளர் மாறியிருக்கிறார், தலைமை பயிற்சியாளர் மாறியிருக்கிறார், ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். கேப்டன்ஸி மாற்றமும் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

இத்தனை மாற்றங்கள் இருக்கும் நிலையில், அணியின் டாப் ஆர்டரில் ஷாய் ஹோப்பை எடுப்பதன் மூலம் அணிக்கு நல்ல பேலன்ஸை கொடுக்கலாம். ஓபனர்கள் இருவரும் இந்தியர்களை பயன்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். பதும் நிசங்கா சோபிக்காவிட்டால் இந்த ஆப்ஷனே பெஸ்ட்.

ஏற்கெனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணி சூழலுக்கு பழக்கப்பட்டவர் என்பதால் நிச்சயம் அணிக்குள் நல்ல புரிதலும் ஏற்படும். அதேபோல், டெல்லி அணிக்கு விக்கெட் கீப்பிங் ஆப்ஷனையும் தருவார்.

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரியான்ஸ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங்கை அடுத்து நம்பர் 3இல் கூப்பர் கானொலி விளையாடினார். கடந்தாண்டு அவர் சோபித்தாலும் அவருக்கு பேக்-அப்பாக ஷாய் ஹோப்பை எடுக்கலாம்.

இவர் விக்கெட் கீப்பிங்கிலும் நல்ல ஆப்ஷனை கொடுப்பார். மிடில் ஆர்டரில் சீனியர் என்பதால் நிலைநின்று இன்னிங்ஸை கட்டமைக்க இவர் பெரியளவில் உதவுவார்.

ஐபிஎல் தொடரை பொருத்தவரை இம்பாக்ட் வீரர் விதி, 2027 சீசனில் தொடரும். எனவே, வெளிநாட்டு வீரர்களை சரியான தொகையில், சரியான காம்பினேஷனில் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்பதால் அதன் பிறகே ஷாய் ஹோப்பை குறிவைக்கும் அணிகள் குறித்து தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.

இருப்பினும் தற்போதைய அணிகளின் தேவை மற்றும் நிலையை கருத்தில்கொண்டு இந்த கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே, கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, எஸ்ஆர்ஹெச், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளில் டாப் ஆர்டர் நல்ல செட்டாகியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | பயிற்சியாளரை கழட்டிவிட்ட CSK... அதிரடி மாற்றம் - 15 வருட உறவு முறிந்தது

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL