SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஓய்வூதியம் அதிரடி உயர்வு! சுதந்திர தினவிழாவில் CM விஜய்யின் 5 முக்கிய அறிவிப்புகள் - என்னென்ன?

CM Vijay Independence Day Announcement: சென்னையில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்வர் விஜய் ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். என்னென்ன அறிவிப்புகள் என்பது குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Aug 15, 2026, 09:49 AM IST | Updated: Aug 15, 2026, 10:54 AM IST
Join

CM Vijay Independence Day Announcement: இந்தியா முழுவதும் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி 80வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றிய நிலையில், தமிழகத்தில் முதல்வர் விஜய் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின், முதல்முறையாக விஜய் தேசியக் கொடியை ஏற்றினார்.  

கோட்டையில் கொடியேற்றிய விஜய்

இதற்காக இன்று காலை 8 மணிக்கு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு, மெரினா கடற்கரைக்கு வந்தடைந்தார். காலை சுமார் 8.35 மணியளவில் கோட்டை முன்பாக அமைக்கப்பட்டுள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்ற விஜய் மேடையை வந்தடைந்தார். 

அதன்பிறகு, காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு,  காலை 8.45 மணிக்கு கொடிக்கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து, முதல்வர் விஜய் சுதந்திர தினவிழாவில் உரையாற்றினார்.  அப்போது முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார்.

5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய்

  1. முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000ல் இருந்து ரூ.50,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  2. விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாநில அரசின் ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
  3. மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000லிருந்து ரூ.7000 ஆக உயர்த்தி  வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
  4. மாநில அரசால் விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  5. வீரபாண்டியன் கட்டபொம்மன், முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, மருதுசகோதரர்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழிதோற்றலுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,500ஆக உயர்த்தி வழங்கப்படும்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES