SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆவின் பால் உற்பத்தி நிறுத்தமா? அதிர்ச்சியில் மக்கள்... ஆவின் நிர்வாகம் விளக்கம்

Aavin Milk Latest News: ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தம் குறித்த செய்திகள் முற்றிலும் தவறானவை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பால், நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு, தடையின்றி விநியோகிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 26, 2026, 09:38 AM IST | Updated: Oct 26, 2026, 09:55 AM IST
Join

Aavin Milk Latest News:  தமிழகம் முழுவதும் பிரதான பால் விநியோகமாக ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழக கூட்டுறவுத்துறை பால் உற்பத்தியாளர்கள் மூலம் தமிழகம் முழுவதும் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்படுகிறது.   மக்களுக்கு குறைந்த விலையில் ஆவின் பால் உள்ளிட்ட பால் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆவின் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆவின் பால் விநியோகம் நிறுத்தமா?

இதற்கிடையில், ஆவின் பால் மற்றும் பனீர், வெண்ணெய் போன்ற 100 பொருள்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இதற்கு ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தம் குறித்த செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் பால், நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு, தடையின்றி விநியோகிக்கப்படுகின்றன எனவும் ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பனீர், வெண்ணெய், நெய், குக்கீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் படிக்க: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அரசின் சுற்றுலா, பயணப்பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளின் உற்பத்தியும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு, விற்பனை நிலையங்களுக்கும் சில்லறை விற்பனை முகவர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆவின் நிறுவனம் 175-க்கும் மேற்பட்ட வகையான பால் மற்றும் பால் பொருட்களைத் தயாரித்து, நுகர்வோரின் தேவைக்கேற்ப சந்தைப்படுத்தி வருகிறது. சென்னையில் உள்ள சுமார் 36 ஆவின் பாலகங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனம் சார்பில் புதிதாக சாக்லேட் (Rs1) மற்றும் பால் ரஸ்க் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்புதிய பொருட்களுக்கும் பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதுடன், நுகர்வோரின் ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க: பருவமழை எதிரொலி: அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

ஆவின் நிர்வாகம் விளக்கம்

மேலும், தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கியப் பால் பொருட்களின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது ஆவின் பால் பொருட்களுக்கு நுகர்வோரிடையே தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பைப் பிரதிபலிக்கிறது.  தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு. 

பல்வேறு நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், விற்பனை முகவர்களிடமிருந்து பெறப்படும் தேவைக் கணிப்புப் பட்டியல்களின் அடிப்படையில், அவர்களுக்குத் தேவையான பால் பொருட்களைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு மாறானவை. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆவின் நிறுவனம், தரமான பால் மற்றும் பால் பொருட்களைத் தொடர்ந்து தயாரித்து, நுகர்வோரின் தேவைக்கேற்ப தடையின்றி விநியோகம் செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TN Weather: மழைக்கு லீவ்! நவம்பர் 1 வரை வறண்ட வானிலை.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES