• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: அண்ணன் சீர் திட்டத்தில் 1 பவுன் தங்கம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: அண்ணன் சீர் திட்டத்தில் 1 பவுன் தங்கம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Annan Seer Scheme : தமிழ்நாடு அரசின் அண்ணன் சீர் திட்டம் அறிவிப்பு. திருமணமாகும் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் கிடைக்கும். யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 05, 2026, 09:06 PM IST|Updated: Oct 05, 2026, 09:11 PM IST
joinshare
பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: அண்ணன் சீர் திட்டத்தில் 1 பவுன் தங்கம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Image Credit: Annan Seer Scheme

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: அண்ணன் சீர் திட்டத்தில் 1 பவுன் தங்கம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: அண்ணன் சீர் திட்டத்தில் 1 பவுன் தங்கம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

2

இப்போதைய காலகட்டத்தில் எதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்? முக்கிய தகவல்

3

டெல்லியில் பெண் பத்திரிகையாளர் துன்புறுத்தல்..Chennai Press Club கண்டனம்!

4

யூடியூபர் மதுமிதா மீது செயின் திருட்டு குற்றச்சாட்டு! 118 பவுன் திருடப்பட்ட வழக்கில் திருப்பம்..

5

Explained : Emergency Fund சேர்க்க சொல்லும் முதலீட்டாளர்! இதன் அவசியம் என்ன? Save செய்வது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Annan Seer Scheme : தமிழ்நாட்டில் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் மணப்பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ‘அண்ணன் சீர் திட்டம்’ செயல்படுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது இதை தவெக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய மணப்பெண்களுக்குத் திருமணத்தின் போது எட்டு கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்க நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசாணை இன்று வெளியிட்டுள்ளது.  

திட்டத்தின் பின்னணியும் நோக்கமும்:

தமிழர் பாரம்பரிய மரபில் திருமணத்தின்போது அண்ணன் வழங்கும் 'சீர்' என்பது வெறும் பொருள் அல்ல, அது அன்பு, பாசம் மற்றும் பாதுகாப்பின் அடையாளம் ஆகும். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஏழைப் பெண்களின் குடும்பச் சுமையைக் குறைக்கவும், புதிய வாழ்க்கையைத் தொடங்கும் மணப்பெண்களுக்கு ஓர் அண்ணனாக அரசு துணை நிற்கும் என்ற உறுதியை வெளிப்படுத்தவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வழங்கப்படும் சீர்வரிசை மற்றும் கொள்முதல் முறை:

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு 8 கிராம் எடை கொண்ட (22 காரட்) தூய தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அரசால் அன்பளிப்பாக வழங்கப்படும். இந்தப் பொருட்கள் தமிழ்நாடு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளிச் சட்டம், 1998-ன் வழிகாட்டுதலின்படி முறையான டெண்டர் மூலம் வெளிப்படையாகக் கொள்முதல் செய்யப்படும். இதில் வழங்கப்படும் தங்க நாணயத்தின் விலை, இந்தியப் பொன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் (IBJA) அன்றைய நாளில் நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும்.  

தகுதி வரம்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை:

தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பங்களில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்கும் மணப்பெண்கள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு இத்திட்டம் பொருந்தும். தகுதியான பயனாளிகள் எளிதில் பயன்பெறும் வகையில், பிரத்யேக அரசு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்படும். இத்திட்டத்திற்கான கூடுதல் தகுதிகள் மற்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் தனியாக வெளியிடப்பட உள்ளன.  

ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு:

இந்த நலத்திட்டத்தை மாநிலம் முழுவதும் உடனடியாகத் தொடங்கிச் செயல்படுத்தும் நோக்கில், நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக ரூ. 812 கோடி நிதியைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குத் திருமணச் செலவைக் குறைக்கும் மிகப்பெரிய வாழ்வாதார உதவியாக இத்திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes