SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மகளிர் உரிமைத் தொகை : ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் ஓய்வூதியம், உரிமைத் தொகை பெற முடியுமா?

Magalir Urimai Thogai : ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு பெண்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை மற்றும் மாத ஓய்வூதியம் பெற முடியும். எப்படி என்பதைஇங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Aug 07, 2026, 10:40 AM IST | Updated: Aug 07, 2026, 10:51 AM IST
Join

Magalir Urimai Thogai Update : தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. பெண்களுக்கு இலவச பேருந்து முதல் மகளிர் உரிமைத் தொகை வரை பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், 1.31 கோடி தமிழ்நாட்டு பெண்களின் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதம் மாதம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இன்னும் பலர் விண்ணப்பிக்க தயாராக இருக்கும் நிலையில், ரே வீட்டில் இரண்டு பெண்கள் ஓய்வூதியம், உரிமைத் தொகை பெற முடியுமா? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : ரூ.1000 பெறும் பெண் இறந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்?

இதுவரை உரிமைத் தொகை (Magalir Urimai Thogai) திட்டத்தில் பயன்பெறாதவர்கள் தகுதியிருந்தால், இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க அரசு கொடுக்கும் காலவகாசத்தில் விண்ணப்பித்து பயனாளியாக சேர்ந்துகொள்ளலாம். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசும் விரைவில் இத்திட்டத்தில் புதிய பயனாளிகள் சேருவதற்கு வாய்ப்பு கொடுக்கும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.  

அதன்படி, அரசு கொடுக்கும் காலவகாசத்தில் கொடுக்கப்படும் விண்ணப்பங்களின் மீது பரிசீலனை நடைபெற்று தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மகளிர் உரிமைத்தொகை (Magalir Urimai Thogai) திட்டத்தில் பயனாளியாக அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படுவார்கள். இருப்பினும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சில சந்தேகங்கள் மக்களிடம் இருக்கின்றன.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : 12 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு, ஏன்? - முக்கிய அப்டேட்

மகளிர் உரிமைத்தொகை பெற வேண்டும் என்றால் வீட்டில் யாரும் முதியோர் உதவித்தொகை பெறக்கூடாது, ரேஷன் கார்டில் முதியோர்கள் பெயர் இருந்தால் அவர்களுக்கு மாத உதவித் தொகை கிடைப்பதால் தங்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காது என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இத்திட்டத்தில் ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட சில விதிமுறைகளை மக்கள் தவறாக புரிந்து கொண்டார்கள். அதனால், உரிமைத் தொகை பெறுவதற்காக வீட்டில் இருக்கும் முதியவர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் இருந்து நீக்குவதற்கும் விண்ணப்பித்த நிகழ்வும் நடைபெற்றது.

ஆனால், அரசு இதுகுறித்து பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விதிமுறைகளிலும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதாவது, ஒரு வீட்டில் இருக்கும் முதியவர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியம் பெற்றால், ஓய்வூதியம் பெறும் முதியவருக்கு உரிமைத் தொகை கிடைக்காது. அதாவது ஓய்வூதியம் பெறும் முதியோர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.

அதேநேரத்தில் அந்த வீட்டில் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இருந்தால் அவர்கள் இந்த திட்டத்துக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். எனவே, பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பிக்கொண்டிருக்காமல் அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகளை தெளிவாக படித்துவிட்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும். அந்தவகையில், ஒரு வீட்டில் வயதான பெண்ணும், உரிமைத்தொகை பெற தகுதியான பெண்ணும் சேர்ந்து ஓய்வூதிய திட்டத்திலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலும் பயனாளியாக முடியும்.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டுமா? பெண்களுக்கான முக்கிய அப்டேட்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES