4 புறநகர் ரயில்கள் பகுதி ரத்து! 11 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள்..எந்த வழித்தடத்தில்?
சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக 11 நாட்களுக்கு 4 புறநகர் மின்சார ரயில்கள், பகுதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
சென்னைதான், இருப்பதிலேயே அதிக ஐடி பார்க் மற்றும் தொழில்நிறுவனங்களை கொண்ட நகரமாக இருக்கிறது. இங்கிருக்கும் நிறுவனங்களுக்கு வேலைக்கு வருபவர்கள், பெரும்பாலும் சென்னையை சேர்ந்தவர்களாகவும் சென்னையின் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். தினமும் லட்சக்கணக்கானோர், தங்களின் வேலை மற்றும் தனிப்பட்ட காரணங்களூக்காக சென்னை வருவதற்கு புறநகர் ரெயில் சேவையைத்தான் நம்பி இருக்கின்றனர். அப்படி இருக்கையில், சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், வரும் 11 நாட்களுக்கு 4 புறநகர் மின்சார ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு:
புறநகர் ரயில் சேவைகள் ரத்து குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் தொழில்நுட்ப மற்றும் தண்டவாள பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பணிகள், 7, 9, 11,14, 16, 18, 21, 23, 25, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில், பிற்பகல் 12:15 மணி முதல், பிற்பகல் 1.15 மணி வ் அரை நடைபெற இருக்கிறது.
இதையொட்டி, மூர்மார்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து பிற்பகல், 11.35 மணிக்கு புறப்பட்டு, கும்மிடிப்பூண்டி செல்லவேண்டிய இமு ரயிலும், சூலூர்ர்பேட்டையிலிர்ருந்து பிற்பகல் 11.45 மணிக்கு புறப்பட்டு, மூர்மார்க்கெட் செல்ல வேண்டிய இமு ரயிலும் பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்பட இருக்கின்றன.
இந்த 11 நாட்களில் சூலூர் பேட்டையிலிருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு, மூர்ர்மார்கெட் செல்லும் ரயில்கள், முழுமையாக ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மக்களுக்கு இதனால் பாதிப்பா?
பொதுவாக, சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், கல்லூரிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் பகல் வேலைக்கு அதாவது டே ஷிப்ட் பணியாளர்களாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் வேலைக்கு வரும் காலை வேளையில், ரயில் சேவைகள் ரத்தாகி இருந்தால், அவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும். அதே போல, வேலை முடிந்து மாலை வீடு திரும்புவர். அப்போது ரயில் சேவை பாதிக்கப்பட்டாலும், அதிக கூட்ட நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மதிய வேளையில் ரயில் சேவைகள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதால், அந்த வேளையில் ரயிலுக்கு காத்திருப்பவர்களுக்கு தங்கள் வேலைகளை முடிக்க தாமதம் ஆகலாம். இதனால், பொதுமக்களுக்கு பெரிய அளவில் இடையூறு எழாது என்பதை நம்பலாம்.
மேலும் படிக்க | அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் கணக்கெடுப்பு தொடக்கம்! அரசு லேட்டஸ்ட் அப்டேட்
தினமும் எத்தனை பேர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பயணிக்கின்றனர்?
சென்னை சென்ட்ரல் மூர் மார்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் நிலையத்திலிருந்து இயக்கபடும் மேற்கு மற்றும் வடக்கு வழித்தடங்களில், தினசரி சுமார் 7.5 லட்சம் முதல், 8.6 லட்சம் வரை, பயணிகள் பயணம் செய்வதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த சென்னை புறநகர் ரயில்வே அமைப்பில், தினசரி சராசரியாக 9 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.
இதில், சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர்/அரக்கோணம்/திருத்தணி உள்ளிட்டவை மேற்கு வழித்தடங்கல் ஆகும். இந்த வழித்தடத்தை தினமும் சுமார் 5.5 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இது, சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மிக விரிவான புறநகர் பாதையாகும்.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை வழித்தட்ம் வடக்கு வழித்தடங்களாகும். இந்த வழித்தடத்தை தினமும் சுமார் 2 லட்சம் மக்கள் வரை பயன்படுத்துகின்றனர்.
பயணிகளின், அதீத கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சமீபத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து 9 பெட்டிகள் கொண்ட ரயில்களும், 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்பட்டு, இரூக்கை வசதி 21% வரை அதிகரிக்கப்பட்டது. மேலும், 2030ஆம் ஆண்டிற்குள், ஒட்டுமொத்த சென்னை புறநகர் ரயில் பயணிகளின் எண்ணிக்கை, தினசரி 16 லட்சமாக உயரலாம் என தெற்கு ரயில்வே கணித்திருக்கிறது.
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு! 6,574 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?