CM Vijay Ajith Gifts: முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் லண்டன் சென்றுள்ளார். சென்னையில் இருந்து கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட சென்ற அவர், செப்டம்பர் 12ஆம் தேதி நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். லண்டன் பயணத்தின் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. செப்டபம்ர் 12ஆம் தேதி இரவு புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய திடலுக்கு முதல்வர் விஜய் சென்றார்.
அங்கு நடைந்த மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயததை அவர் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் அஜித்குமார், விஜய் சந்தித்துக் கொண்டது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்காக நண்பர் விஜய் வந்ததை பார்த்த அஜித் குமார் கையெடுத்து கும்பிட்டார்த. அதை பார்த்த விஜய்யோ ஓடிச் சென்று அஜித்தை கட்டிபிடித்துக் கொண்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இன்று வரை இருந்து வருகிறது. மேலும், முதல்வர் விஜய் ரேஸ் சூட்டில் இருந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. கார் பந்தயம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முனபு, அஜித் குமார் காரில் அமர்ந்து விஜய் கை கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார்.
விஜய்க்கும், அஜித் குமாருக்கு ஆகாவே ஆகாது என ரசிகர்கள் பேசி வந்த நிலையில், லண்டனில் அவர்களின் சந்திப்பை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், தற்போது சோஷியில் மீடியாவில் முதல்வர் விஜய்யும், நடிகரும், ரேசருமான அஜித்தும் பரிசுகளை பரிமாறிக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
— Arun Vijay (@AVinthehousee) September 14, 2026
லண்டனில் நடிகர் அஜித்துக்கு ரேஸிங்க கார் மினியேச்சரை முதல்வர் விஜய் பரிசாக அளித்தார். 'பிரியமுடன் விஜய் To My Lovely Brother Ajith' எனக் கையெழுத்திட்டுள்ளார். இந்த கார் பொம்மையில் அஜித்குமார் ரேசிங் என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல, முதல்வர் விஜய்க்கும் நடிகர் அஜித்தும் ஹெல்மெட் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இந்த பரிசில் 'Love Ajith Kumar' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. தமிழ்நாடு வரைப்படம் இருக்கும் சிலையையும் நடிகர் அஜித் பரிசாக கொடுத்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அஜித்தின் குழுவுடன் முதல்வர் விஜய் மற்றும், ஆதவ் அர்ஜுனா புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முதல்வர் விஜய்யும், அஜித்குமாரும் பரிசுகளை பரிமாறிக் கொள்வது இதுவே முதல்முறையாகும். இருவரும் சினிமாவில் இருக்கும்போது, பெரிதாக சந்தித்தது கூட கிடையாது. ஆனால், லண்டனில் இருவரும் சந்தித்து நட்பை பரிமாறிக் கொண்டனர். அண்மையில், நடிகர் அஜித் குமாரின் தாயார் இறந்தபோது, நேரில் சென்று விஜய் ஆறுதல் கூறினார். இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
முதல்வர் விஜய்யின் லண்டனம் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்றும் ஆனால், இன்று வரை முதலீடு ஈர்க்கப்பட்டது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். முதலீடுகளை ஈர்க்காமல், அஜித் ரசிகர்கள் தன்பக்கம் இழுக்கும் முயற்சிகளில் விஜய் ஈடுபடுவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.