CM Vijay Free Lpg Cylinder: அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்" (Annapoorani Super Six) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதல் கட்டமாக ஆண்டிற்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். யாருக்கெல்லாம் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் கிடைக்கும் என்பது குறித்து முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. தினந்தோறும் ஒவ்வொரு துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அதே நேரத்தில், முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 24) 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும்.
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு— CMOTamilNadu (@CMOTamilnadu) August 24, 2026
எனவே, சமூகத்தில் நலிந்த குடும்பத்தினருக்கு அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியாக ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என வாக்குறுதியாக கொடுத்தார். இத்திட்டம் குறித்து முதல்வர் விஜய் எப்போது அறிவிப்பை வெளியிடுவார் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.