ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முதல்வர் விஜய் அறிவிப்பு
CM Vijay Free Lpg Cylinder: அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்" (Annapoorani Super Six) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதல் கட்டமாக ஆண்டிற்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். யாருக்கெல்லாம் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் கிடைக்கும் என்பது குறித்து முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
CM Vijay Free Lpg Cylinder: அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்" (Annapoorani Super Six) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதல் கட்டமாக ஆண்டிற்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். யாருக்கெல்லாம் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் கிடைக்கும் என்பது குறித்து முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. தினந்தோறும் ஒவ்வொரு துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அதே நேரத்தில், முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 24) 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
3 இலவச கேஸ் சிலிண்டர்
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும்.
- எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
- இத்திட்டம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்.
- இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் தோரயமாக 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
யாருக்கெல்லாம் இலவச கேஸ் சிலிண்டர் கிடைக்கும்?
- ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினருக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
- சிறு, குறு விவசாய குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
எனவே, சமூகத்தில் நலிந்த குடும்பத்தினருக்கு அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியாக ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என வாக்குறுதியாக கொடுத்தார். இத்திட்டம் குறித்து முதல்வர் விஜய் எப்போது அறிவிப்பை வெளியிடுவார் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இலவச பேருந்து பயணம்
- மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம் வெற்றிப் பயணம் என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும்.
- முதற்கட்டாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் express, LSS, Deluxe அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள மேற்கொள்ளலாம்.
- மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ளும் வகையில், புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில் சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.
- வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ளவிரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை.
- திருநரும் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் விதி எண் 110இன் கீழ் அறிவித்துள்ளார்.