விவசாயிகளுக்கு குட் நியூஸ்! பயிர்க்கடன் கூடுதல் தள்ளுபடி.. யாருக்கு எவ்வளவு?
TN Govt Crop Insurance: குறு, சிறு விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி குறித்து சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து, பயிர்க்கடன்களுக்கு கூடுதல் தள்ளுபடியை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
TN Govt Crop Insurance: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. பேரவையில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.
அதாவது, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, கூட்டுறவு வங்கியில் ரூ.75000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100 சதவீதம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
ரூ.75000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி
முதல்வர் விஜய் பேசுகையில், குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வரை முழுத் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டதை உயர்த்தி, ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழுத் தொகையையும், ரூ.75,000 க்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000-மும் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டது.
அதன்மூலம் 14.44 இலட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 19.06.2026 அன்று ஆணையிடப்பட்டது. இதில், 31.07.2026 வரை ரூபாய் 5,267 கோடி விடுவிக்கப்பட்டு 13.34 இலட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவும் வைக்கப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள விவசாய சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் பயிர்க்கடன் தள்ளுபடியை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 07.08.2026 அன்று. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மாண்புமிகு மூத்த அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அவர்களின் கோரிக்கைகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டது என்றார்.
எவ்வளவு கடனுக்கு எவ்வளவு தள்ளுபடி?
- கூட்டுறவு வங்கியில் 75,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100 சதவீதம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
- 75,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 75,000 ரூபாய் வரையும் தள்ளுபடி செய்யப்படும்.
- 1,00,000 ரூபாய்க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 35,000 ரூபாய் வரையும் தள்ளுபடி வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதன்மூலம், 75,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்குத் தலா 75,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். இதனால், ஏற்கனவே, பெற்ற தள்ளுபடித் தொகைக்கு மேலாக 40,000 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும்.
இந்தக் கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூபாய் 953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இருந்தாலும், தமிழக விவசாயிகளின் நலனில்தான் நமது நலன் உள்ளது என்று கருதி சுமார் 13.34 இலட்சம் விவசாயிகளுக்கு, மொத்தமாக 6,220 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.