• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /Sorry.. அமைச்சர் பேசியது தவறு தான் - பேரவையில் திமுகவிடன் மன்னிப்பு கேட்ட CM விஜய்

Sorry.. அமைச்சர் பேசியது தவறு தான் - பேரவையில் திமுகவிடன் மன்னிப்பு கேட்ட CM விஜய்

TN Assembly CM Vijay Speech: பேரவையில் முன்னாள் முதல்வர் பெயரை குறிப்பிட்டது தவறு தான் எனவும், அதற்கு அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

Written ByUmabarkavi K
Published: Aug 17, 2026, 12:49 PM IST|Updated: Aug 17, 2026, 01:23 PM IST
joinshare
Sorry.. அமைச்சர் பேசியது தவறு தான் - பேரவையில் திமுகவிடன் மன்னிப்பு கேட்ட CM விஜய்
Image Credit: Image Source: X

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

2

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

3

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

4

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

5

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Assembly CM Vijay Speech: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.  4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் கூடியது.  துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு அவை தொடங்கி நடந்து வருகிறது. 

சட்டப்பேரவை கூட்டத்தொடர்

அவை தொடங்கிய உடனே கர்நாடகாவில் 3 தமிழகர்கள் கொலை செய்யப்பட்டது, கோவை மாணவர் கொலை, திருவொற்றியூர் கொலை,  தேனி மேகமலை விவகாரம் என 5 விவகாரங்கள் குறித்து சிறப்பு கனவன ஈர்பு தீர்மானம் அளித்த திமுக அளித்தது.

இவற்றை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என திமுக கொறடா எ.வ.வேலு வலியுறுத்தினார்.  இதனை அடுத்து, மேகமலை, கோவை மாணவர் கொலை தொடர்பாக காரசாரமாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளிடையே விவாதம் நடந்தது.  இந்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் திமுகவிடம் மன்னிட்டு கேட்டுள்ளார்.

கருணாநிதி என பெயர் குறிப்பிட்ட அமைச்சர்

முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேச்சை குறிப்பிட்டு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் சட்டப்பேரவையில் பேசுகையில், "திருமங்கலம் ஃபார்முலா முதல் 2026 வரை ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்ட குறித்து அடுக்கடுக்காக கூறினார்கள். 

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அடுக்குமொழியில் சொன்னார்கள். ஆனால், 2026ஆம் ஆண்டு ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், முதல்வர் விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் லட்சம் கொடுக்காமல் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார்" என்றார். 

அவை குறிப்பில் இருந்து நீக்கம்

வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசியது அவை குறிப்பில் நீக்கப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.  மேலும், அமைச்சர் செங்கோட்டையனும்  அமைச்சர் ரஞ்சித் குமார் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கிவிடுங்கள் என சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், "முன்னாள் முதல்வர்கள், இன்றைய முதல்வர் என்பதை மட்டுமே சட்டப்பரேவையில் குறிப்பிட வேண்டும் என்பது விதி. முன்னாள் முதல்வர்கள், இன்றைய முதல்வரின் பெயரை குறிப்பிடக் கூடாது என்பது விதி. அமைச்சர்களை குறிப்பிடும்போது, துறையின் பெயரை குறிப்பிட்டு செல்ல வேண்டும். இதனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடைபிடிப்பது நல்லது” என்றார்.

மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்

அமைச்சர் ரஞ்சித் குமார் பேச்சுக்கு முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் மன்னிப்பு கேட்டார். 110-விதியின் கீழ் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு பேசிய முதல்வர் விஜய், "பேரவையில் உங்கள் தலைவர் பெயரை குறிப்பிட்ட பேசியது தவறு தான்.

இதற்கு அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார். அவையில் 'முன்னாள் முதல்வர்' என்று தான் குறிப்பிட வேண்டும் என்ற மரபு உள்ளது என சுட்டிக்காட்டி திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ’அது தவறுதான்' என விஜய் பதிலளித்துள்ளார்.

முதல்வர் வரும்போது எழுந்து நிற்கனுமா?

முதல்வர் விஜய்யின் பேச்சை தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசுகையில், "முதலமைச்சர் சட்டமன்றத்திற்கு உள்ளே வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டும் என்ற கண்ணியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். 8 கோடி தமிழக மக்களின் முதலமைச்சர் வரும்போது மரியாதை செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, "திமுக ஆட்சியில் இருந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்கவில்லை. எழுந்து நிற்கவில்லை என்பது குற்றம், குறையல்ல. அது அவரவர் நடைமுறை. சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை" என்று கூறினார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy