• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /இனி எம்எல்ஏக்களுக்கு தனி கார், உதவியாளர்.. மாதம் ரூ.75,000 படி - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

இனி எம்எல்ஏக்களுக்கு தனி கார், உதவியாளர்.. மாதம் ரூ.75,000 படி - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

TN Vijay Announcement: சட்டப்பேரவையில் 110-ன் விதியின் கீழ் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகளை இன்று அறிவித்துள்ளார். அதாவது, பால் கொளமுதல் விலை உயர்வு, மருத்துவ காப்பீடு உயர்வு, எல்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்பது குறித்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Written ByUmabarkavi K
Published: Aug 19, 2026, 10:09 AM IST|Updated: Aug 19, 2026, 11:00 AM IST
joinshare
இனி எம்எல்ஏக்களுக்கு தனி கார், உதவியாளர்..  மாதம் ரூ.75,000 படி - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
Image Credit: Image Source: X/@tndipr

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

2

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

3

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

4

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

5

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Vijay Announcement: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஆகஸ்ட் 6ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அவ்வப்போது 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 19) 110-ன் விதியின் கீழ், மூன்று அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார்

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், அனைத்து எம்எல்ஏக்களுக்கு தமிழக அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் கூறுகையில், முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதி பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தொகுதி முழுவதும் சென்று வர அரசு சார்பில் கார் வழங்கப்படும். இதற்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகன படியாக வழங்கப்படும்.  

வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதம் ரூ.75,000 வாகனப் படியாக வழங்கப்படும். எம்எல்ஏக்கள் அலுவலக பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். அலுவலக பணியாளர்களுக்கு ரூ.25,000 மாதம் படியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு — CMOTamilNadu (@CMOTamilnadu) August 19, 2026

பால் கொள்முதல் விலை உயர்வு

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ 38-ல் இருந்து ரூ 41 ஆக உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டிற்கு ரூபாய் 360 கோடியும் செலவாகும். 

பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும் அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 3 லட்சக்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் இந்த விலை உயர்வால் பயன் பெறுவார்கள் என முதல்வர் விஜய்  அறிவித்துள்ளார்.

 

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ 38-ல் இருந்து ரூ 41 ஆக உயர்வு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு — CMOTamilNadu (@CMOTamilnadu) August 19, 2026

 

மருத்துவ துறையில் முக்கிய அறிவிப்பு

சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் மருத்துவத்துறையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி,

  • ரூ.351 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.
  • பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு  உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, ரூபாய் 5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.
  • திருநங்கைகளுக்கான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, தருமபுரி, கன்னியாகுமரியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ வழங்கப்படும்.
  • 673 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் மேம்படுத்தப்படும்.
  • சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனயில் 471 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளத்துடன் சேர்ந்து 14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
  • முதற்கட்டமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.84 கோடியில் 8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy