SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இனி எம்எல்ஏக்களுக்கு தனி கார், உதவியாளர்.. மாதம் ரூ.75,000 படி - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

TN Vijay Announcement: சட்டப்பேரவையில் 110-ன் விதியின் கீழ் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகளை இன்று அறிவித்துள்ளார். அதாவது, பால் கொளமுதல் விலை உயர்வு, மருத்துவ காப்பீடு உயர்வு, எல்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்பது குறித்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Written By Umabarkavi K
Published: Aug 19, 2026, 10:09 AM IST | Updated: Aug 19, 2026, 11:00 AM IST
Join

TN Vijay Announcement: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஆகஸ்ட் 6ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அவ்வப்போது 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 19) 110-ன் விதியின் கீழ், மூன்று அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார்

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், அனைத்து எம்எல்ஏக்களுக்கு தமிழக அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் கூறுகையில், முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதி பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தொகுதி முழுவதும் சென்று வர அரசு சார்பில் கார் வழங்கப்படும். இதற்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகன படியாக வழங்கப்படும்.  

வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதம் ரூ.75,000 வாகனப் படியாக வழங்கப்படும். எம்எல்ஏக்கள் அலுவலக பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். அலுவலக பணியாளர்களுக்கு ரூ.25,000 மாதம் படியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பால் கொள்முதல் விலை உயர்வு

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ 38-ல் இருந்து ரூ 41 ஆக உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டிற்கு ரூபாய் 360 கோடியும் செலவாகும். 

பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும் அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 3 லட்சக்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் இந்த விலை உயர்வால் பயன் பெறுவார்கள் என முதல்வர் விஜய்  அறிவித்துள்ளார்.

 

 

மருத்துவ துறையில் முக்கிய அறிவிப்பு

சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் மருத்துவத்துறையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி,

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES