• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /முதல்முறை எம்எல்ஏ-க்களுக்கு கார் & உதவியாளர்? முதலமைச்சர் விஜய் அதிரடி முடிவு

முதல்முறை எம்எல்ஏ-க்களுக்கு கார் & உதவியாளர்? முதலமைச்சர் விஜய் அதிரடி முடிவு

சட்டப்பேரவையில் காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ ஜோதிமணி கார் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதலமைச்சர் விஜய் கார் மற்றும் ஒரு உதவியாளரை கொடுக்க முடிவு செய்துள்ளராம்.

Reported ByR BalajiEdited ByR Balaji
Published: Aug 15, 2026, 06:05 PM IST|Updated: Aug 15, 2026, 06:10 PM IST
joinshare
முதல்முறை எம்எல்ஏ-க்களுக்கு கார் & உதவியாளர்? முதலமைச்சர் விஜய் அதிரடி முடிவு
Image Credit: Image Source: X

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

2

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

3

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

4

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

5

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் ஆகஸ்ட் 05 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. முதல் நாளில் தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அமைச்சர் மரிய வில்சன் உரையை வாசித்து பட்ஜெட்டை விவரித்தார். இதையடுத்து ஆகஸ்ட் 06 ஆம் தேதி வேளான் பட்ஜெட் அமைச்சர் வினோத்தால் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

விசிக எம்எல்ஏவின் அன்பான கோரிக்கை  

இந்த நிலையில், சட்டப்பேரவையில் காட்டுமன்னார் கோயில் எம்எல்ஏ விசிக ஜோதிமணி பேசியது வைரலானது. அவர் தனது கார் வழங்க வேண்டும் என ஒப்பனாக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். அதேசமயம் தனக்கென ஒரு உதவியாளரை வைத்து பணம் கொடுக்கும் அளவிற்கு பண வசதியும் இல்லை என கூறினார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

காட்டுமன்னார்கோயில் தொகுதி விசிக எம்எல்ஏ ஜோதிமணி பேசியதாவது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவையானதை கோரிக்கை மனுவாக ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். நான் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சட்டமன்றத்திற்கு வருகிறேன். பேருந்தில் வருவதற்கும் ரயில் மூலமாக வருவதற்கும் அலவன்ஸ் தருகிறீர்கள். ஆனால் என்னிடம் சொந்தமாக கார் இல்லை. என்னுடைய தொகுதி 40 கிலோ மீட்டர் சுற்றளவுடன் உள்ளது. ஆனால் அங்கு சென்று மக்கள் பணி செய்ய என்னிடம் வாகன வசதி இல்லை. வாடகை கொடுத்து சொல்லும் அளவுக்கு என்னுடைய பொருளாதாரமும் இல்லை. அதேபோல் ஒரு செயலாளரை கையில் வைத்துக் கொண்டு அவருக்கு ஊதியம் கொடுப்பதற்கு வசதியும் இல்லை.

கார் வசதி வேண்டும்

இம்முறை வெற்றிப் பெற்றிருக்கும் பெரும்பாலான எம்எல்ஏ-க்களின் நிலைமை இப்படிதான் உள்ளது. அவர்கள் அனைவரும் முதல் முறை எம்எல்ஏக்கள். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும். ஏன் காலணி அணியாத எம்எல்ஏ-க்கள் கூட இருக்கிறார்கள். காலணி அணிவதற்கு கூட அவர்களிடம் வசதி இல்லை. அப்படி இருக்கின்றன நிலையில், லஞ்சம் இல்லாத அரசு அமைய நம்முடைய உறுப்பினர்களை நன்றாக வைத்துக்கொள்வது அவசியம். நான் வைத்திருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

எம்எல்ஏ ஜோதிமணியின் இந்த கோரிக்கைக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறபோது, இது போன்ற சிரமங்கள் ஏற்படலாம் என்று கருதி அவர் கூறி இருக்கிறார் என நான் நினைக்கிறேன். இதை முதல்வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்வது எனது கடமை. ஏனென்றால் முதலமைச்சரின் கரங்கள் கிள்ளி கொடுக்கிற கரங்கள் அல்ல, அள்ளி கொடுக்கிற கரங்கள் என கூறினார்.

முதலமைச்சர் விஜய் அதிரடி முடிவு

இந்த நிலையில், முதல் முறை எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் உதியாளர்கள் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy