SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இனி அனைத்து பேருந்திலும் இலவச பயணம்! மகளிருக்கு ஜாக்பாட் அறிவிப்பு..எப்போது முதல்?

Vetri Payanam Ladies Free Bus : வெற்றி பெயண திட்டத்தின் கீழ், மகளிர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Written By Yuvashree M
Published: Aug 24, 2026, 09:46 AM IST | Updated: Aug 24, 2026, 10:50 AM IST
Join

Vetri Payanam Ladies Free Bus : சட்டமன்றத்தில், முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் மகளிருக்கான முக்கியமான திட்டங்கள் குறித்தும், பரந்தூர் விமான நிலையத்திட்டம் கைவிடப்படும் என்றும் கூறியிருக்கிறார். இலவச கேஸ் சிலிண்டர், வெற்றிப் பயண திட்டம் விரிவாக்கம் உள்ளிட்டவற்றை அறிவித்திருக்கிறார்.

மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம்:

வெற்றிப் பயணம் எனும் திட்டத்தின் கீழ், இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்த திட்டத்தில், முதற்கட்டமாக மாநகரம், நகரப்பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும், மகலிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக, புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரணக்கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம் என கூறியிரிருக்கிறார்.

மகிழ்ச்சியில் மகளிர்:

இதற்கு முன்னர், மகளிர் சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டுமே கட்டணமில்லாமல் பயணித்து வந்தனர். இப்போது மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என முதல்வர் விஜய் அறிவித்திருப்பது மகளிருக்கு பெரு நிம்மதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

எப்போது முதல் அமல்?

வெற்றிப்பயண திட்டம், தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டு தோரும் தோராயமாக சுமார் ரூ.6000 கோடி செலவீனம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் இல்லை:

இந்த வெற்றி பயண திட்டத்தின் கீழ் பயணம் செய்ய, மகளிருக்கு வருமான உச்சவரம்போ மற்றும் பயணம் மேற்கொள்ல விரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், திருநங்கைகளும் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம்.

பேருந்துகள் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு!

சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில்  தவறான தகவல்கள் பரவியது. இந்த குற்றச்சாட்டு, திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்தே வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்திருக்கிறது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து சுமார் 1,724 பேருந்துகள் மகளிர் இலவச சேவைக்காக இயக்கப்படுவதாகவும், தற்போது அந்த பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும் தெரிவிகப்பட்டிருந்தது.

சொன்னதை செய்யும் விஜய்!

முதல்வர் விஜய், மகளிருக்கான மாஸான அறிவிப்புகளை இன்று அறிவித்திருக்கிறார். ஆட்சிக்கு வரும் முன்னர், தன்னுடைய பிரச்சாரத்தில் 6 மாணிய சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதில், முதற்கட்டமாக ‘அண்ணபூரணி சூப்பர் 6’ எனும் திட்டத்தின் கீழ் 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என கூறியிருக்கிறார். அதே போல, மகளிருக்கான இலவச பேருந்து விரிவாக்கம் குறித்தும் அறிவித்தார். அதே போல, பரந்தூர் விமான நிலைய திட்டத்தையும் கைவிடுவதாக கூறியிருக்கிறார். இதை பார்க்கும் மக்கள், விஜய் சொன்னதை செய்வதாக கூறி வருகின்றனர். அதே போல தமிழக பட்ஜெட்டில் தாய்மாமன் சீர் திட்டம், நெல் கரும்பு ஊக்கத்தொகை உயர்வு, திருமணமாகும் பெண்களுக்கு பட்டுப்புடவை மற்றும் தங்கம் தரும் அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES