CM விஜய்-சங்கீதா Reunion நடக்கும் நாள்..ஆக., 25? அன்னைக்கு அப்படி என்ன ஸ்பெஷல்?
Sangeetha Vijay : முதல்வர் விஜய்யும், அவருடைய மனைவி சங்கீதாவும் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி, மீண்டும் இணைவார்களா என்கிற சந்தேகம் பல பேருக்கு எழுந்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
Sangeetha Vijay : முதல்வர் விஜய்-சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், வீடியோ கால் மூலமாக ஆஜரான சங்கீதா, தான் சுய நினைவுடன் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கூறிவிட்டார். இதனால், வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி இவர்களது குடும்ப ரீ-யூனியன் நடக்குமா என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.
விஜய்-சங்கீதா : விவாகரத்து வழக்கு என்ன ஆச்சு?
முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா, அவரிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்டத்தின் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சங்கீதா லண்டனில் இருப்பதால் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமாக குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது தான் தன்னுடைய விவாகரத்து மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இந்த ட்விஸ்ட், யாரும் எதிர்பாராத ஒன்றாகவும், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாகவும் இருந்தது.
27வது திருமண நாள்!
முதல்வர் விஜய்க்கும், சங்கீதாவிற்கும் 1999ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது. இந்த வருடம் அவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி, 27வது திருமண நாள் ஆகும். இந்த 27வது திருமண நாளில், இவர்கள் இருவரும் இணைவார்களா, சந்தித்து பேசுவார்களா எனும் சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.
சங்கீதாவின் விவாகரத்து மனு கூறியது என்ன?
சங்கீதா, தன்னுடைய விவாகரத்து மனுவில் விஜய் குறித்து பேசியிருந்த பல விஷயங்கள் பெரும் புயலை கிளப்பியிருந்தது. முதல்வர் விஜய், ஒரு பெயர் குறிப்பிடாத நடிகையுடன் உறவில் இருந்ததை, ஏப்ரல் 2021ஆம் ஆண்டில் கண்டறிந்ததாகவும், அதன் பிறகு விஜய் தன்னுடைய நிதி விவகாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் தன்னை கட்டுப்படுத்தியதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
பல முறை, திருமண வாழ்வை மேம்படுத்த முயற்சிகளை முன் வைத்த போதும், அது எந்த பலனையும் அளிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும், திருமண உரவை புதுப்பிக்க இயலாது என்ற முடிவுக்கு வந்த போது விவாகரத்து கோரியதாக குறிப்பிட்டிருந்தார்.
பிள்ளைகளின் நிலை என்ன?
விஜய்க்கும், சங்கீதாவிற்கும் ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் ஜேசன் சஞ்சய், தற்போது தன் முதல் படத்தை இயக்கி அதன் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டுள்ளார். திவ்யா சாஷா, தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்கள் தாயுடன்தான் இருந்தனர்.
ஜேசன் சஞ்சய், சில நாட்களுக்கு முன்னர் கொடுத்திருந்த ஒரு நேர்காணலில் தன் தந்தை குறித்து பாசமாக பேசியிருந்தார். இதனால், இவர்கள் குடும்பம் இப்போது சுமூகமாக போயிருப்பதாக தற்போது பலரும் பேசி வருகினற்னர்.