SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தீபாவளி ஷாப்பிங் பிளானா? பட்டுப்புடவைகளுக்கு 30% தள்ளுபடி.. கோ ஆப்டெக்ஸில் சூப்பர் சலுகை

TN Govt Co Optex Discount: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு கோ ஆப்டெக்ஸில் 30 சதவீதம் தள்ளுபடி விற்பனையில் வழங்குகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு, உங்கள் தீபாவளி பண்டிகைக்கு துணிகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 03, 2026, 05:08 PM IST | Updated: Oct 03, 2026, 05:21 PM IST
Join

Salem Latest News: தமிழகம் முழுவதும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கடைகள் செயல்பட்டு வருகிறது. கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை கீழ் செயல்பட்டு வருகிறது. கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சார்பில் அவ்வப்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது முக்கியமான அறிவிப்பை சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை

சேலம், கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.10.2026) முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்கள். கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 91 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும், தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குதற்பொருட்டும் விழா காலங்களில் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.

இந்தாண்டு தீபாவளி 2026-ல் புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், சேலம் பட்டு புடவைகள், திருபுவனம் பட்டு புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன.

மேலும் படிக்க: டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு

மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல். பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து இரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோ ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி

கோ-ஆப்டெக்ஸில் படுக்கை விரிப்புகள், அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், அச்சிடப்பட்ட வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், ஜமக்காளம், காட்டன் சட்டைகள், லினன் சட்டைகள், சட்டைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி இரகங்களான ஏப்ரான், குல்ட், மெத்தைகள், கையுறைகள், டேபுள்மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் மற்றும் பிரிண்டட் படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ரூ.4.42 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்திற்கு ரூ.4.08 கோடி தீபாவளி விற்பனை இலக்காகவும், ஆத்தூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.34.00 இலட்சம் தீபாவளி விற்பனை இலக்காகவும் என மொத்தம் ரூ.4.42 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 199 ரூபாய்க்கு பட்டுப்புடவை... கடலூர் கடையில் குவிந்த பொதுமக்கள் - கடைசியில் ட்விஸ்ட்

30 சதவீதம் தள்ளபடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி இரகங்களுக்கு 30.11.2026 வரை வழங்குகிறது. இந்த கால கட்டத்தில் வாடிக்கையாளர்கள் பயன் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை 15.09.2026 முதல் பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES