SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது வழக்கு! டிச.22க்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது, அம்மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவாகரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.

Written By Yuvashree M
Published: Nov 24, 2026, 12:29 IST | Updated: Nov 24, 2026, 12:58 IST
Image Credit: Arul Vignesh News | Source : Social Media
Join

கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், அந்த மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கவில்லை என்றும், எம்.எல்.ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார் என்பதற்கான ஆதாரம் எங்கே? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைப்பெற்ற விசாரணையில், கடந்த ஜூலை மாதமே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது.

அருள் விக்னேஷ் மீது FIR பதிவு!

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக, தவெக எம்.எல்.ஏ மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவும், நேர்மையான, பாரபட்சமற்ற மற்றும் விரைவான விசாரணையை மேற்கொள்ளவும் காவல்துறை  தலைமை இயக்குநர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக்கோரி, பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்தது.

மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மெகா குட் நியூஸ்! அபராத வட்டி, EMI வட்டி முழுவதுமாக தள்ளுபடி explained

முன்னதாக, திங்கள்கிழமை அன்று, இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏதேனும் புகார் அளித்துள்ளாரா என்பது குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞர் ஜான் சத்யனிடம் நீதிமன்றம் கேட்டிருந்தது. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளிக்காத பட்சத்தில், நீதிமன்றத்தால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் வாய்மொழியாகக் குறிப்பிட்டிருந்தது.

இன்று விசாரணை தொடங்கியதும், முதல் தகவல்  அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசு வழக்கறிஞர், நீதிபதி வி.லட்சுமி நாராயணனிடம் தெரிவித்திருந்தார்.

ஊடகங்களில் போட்டோ வெளியிடக்கூடாது..!

விசாரணையின் போது, ஊடகங்களில் தற்போது பரப்பப்பட்டு வரும் ஆபாச செய்திகள், ஆட்சியரின் புகைப்படங்கள் ஏன் இன்னும் நீக்கப்படவில்லை? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு அரசு வழக்கறிஞர், இதற்கான நடவடிக்கைக்ள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நீதிமன்றம், பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுத்து எந்த பயனும் இல்லை என குறிப்பிட்டது.

”இது, தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம், மறைமுகமாக அவமானப்படுத்தும் செயலாக உள்ளது. புகார் தாரர், ஃபேஸ்புக் பதிவுகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். இதை செய்யுமாறு நான் உங்களுக்கு அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. ஏன் இதை நீங்களாகவே செய்யக்கூடாது?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றம் கிடுக்குப்புடி கேள்விகள்:

POSH சட்டத்தின் கீழ், ஏதேனும் குழு அமைக்கப்பட்டுள்ளதா..? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. மாநில அளவில் அத்தகைய குழு எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அது ஏன் இதுவரை அமைக்கப்படவில்லை என கேட்டது. இதற்கிடையில், இந்த விவகாரத்தை அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், விசாரணையை மேற்கொள்ளும் குழுக்கள் குறித்த விவரங்களையும், POSH சட்டத்தின் கீழ் உள்புகார் குழு அமைக்கப்பட்ட விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

டிசம்பர் 22க்குள் இறுதி அறிக்கை தாக்கல்..

வரும் டிசம்பர் 22ஆம் தேதிக்குள், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார்!! உடனடி நவடிக்கை எடுக்க மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES