கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய தவெக எம்.எல்.ஏ? CM விஜய் அதிரடி முடிவு…
கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு, தவெக எம்.எல்.ஏ ஒருவர் அபாச மெசேஜ் அனுப்பியதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக திமுக திமுக துணை பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி பதிவிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இணையத்தில் கடந்த இரு தினங்களாக, கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏவான விக்னேஷ், கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தகவல்கள் பரவி வந்தன. இதையடுத்து, இது குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனக்குரல்களை எழுப்பி வருகின்றனர்.
கனிமொழி எம்.பி பதிவு:
கனிமொழி எம்.பி இந்த சம்பவம் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில்,
“கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்? முதலமைச்சர் விஜய் அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டுள்ளார்.
பாஜகவின் முக்கிய தலைவரும், எழுத்தாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இந்த சம்பவம் குறித்து, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதில், ”கள்ளக்குறிச்சி #தவெக சட்டமன்ற உறுப்பினர் அந்த மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு மட்டமான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் அது மட்டும் இல்லாமல் போதையில் அவர் வீட்டுக்கு போய் தொல்லையும் கொடுத்துள்ளார்...!
மாற்றத்திற்காக வாக்களித்த தமிழக மக்களே ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே இப்படி நிலைமை என்றால் சாதாரண பெண்களின் நிலை?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
திமுக தரப்பிலிருந்து குவியும் கண்டனங்கள்..
திமுகவின் முக்கிய உறுப்பினரும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவருமான மதுரை எஸ்.பாலா, இது இந்தியாவின் அதிகாரவர்க்கத்திற்கு தேசிய அவமானத்தை தேடி தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தன்னுடைய பதிவில் அவர் “தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வரும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு, கள்ளக்குறிச்சி டிவிகே சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் என்பவரிடமிருந்து ஆபாசமான, தகாத குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னர், அருள் விக்னேஷ் போதையில் ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்றுள்ளார். இது அதிகார வர்க்கத்திற்கே ஒரு தேசிய அவமானம். ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையும் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது தேவையான நடவடிக்கை எடுத்து, தவெக அரசிடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பான இந்தத் தீவிரமான பிரச்சினை” என குறிப்பிட்டிருக்கிறார்.
தவெக மீது குவியும் குற்றச்சாட்டுகள்..
தவெக கட்சி மீது, கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. கள்ளக்குறிச்சியில், தண்ணீர் குறித்து புகார் கொடுக்க வந்த ஒருவரை தவெக துணை சபாநாயகரான ரவி சங்கர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தீபாவளி தினத்தன்று ஒரே நாளில் 11 கொலைகள் நடந்தது, முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் குறித்து அரசு கவனம் செலுத்தாமல் இருப்பது, பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதல் ஊழல் என அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, முதல்வர் விஜய் ஒரு முக்கிய முடிவினை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நாளை ஆலோசனை!
தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை காலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. தவெக எம்.எல்.ஏக்கள் மீது புகார்கள் அதிகரித்து வரும் நிஐயில், கட்சியினருக்கு முதலமைச்சர் விஜய், அறிவுரை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.