பங்குதாரர்களின் நீண்டகால முதலீட்டு மதிப்பை அதிகரிக்கும் நோக்கில் Zee Entertainment Enterprises நிறுவனம் தனது பங்குகளை திரும்பப் பெற (Share Buyback) முடிவு செய்துள்ளது. இதற்காக அதிகபட்சமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யவும் Zee Enterntainment நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
மும்பையில் இன்று (நவ. 12) நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலா ரூ.1 முகமதிப்பு கொண்டு அதிகபட்சம் 6,59,34,065 பங்குகளை திரும்பப் பெற அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒரு பங்குக்கு ரூ.91 என்ற விலையில், மொத்தம் ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள் திரும்பப் பெறப்பட உள்ளன.
இந்த பங்குகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை டெண்டர் ஆஃபர் முறையில் மேற்கொள்ளப்படும். இது நிறுவனத்தின் மொத்த செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 6.86% ஆகும். இந்த பங்குகளைத் திரும்ப பெறும் நடவடிக்கையில் நிறுவனத்தின் புரமோட்டர்கள் மற்றும் புரமோட்டர் குழுவினர் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் நிதிநிலை, கையிருப்பு பணப்புழக்கம் (Free Clash Flow), எதிர்கால வணிக வாய்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் கருத்துகள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Zee Entertainment நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் ஆர். கோபாலன் கூறுகையில், நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பில் அதன் உண்மையான மதிப்பு பிரதிபலிக்கவில்லை என்றும் பங்குகளை திரும்பப் பெறுவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் உள்ளடக்கம், டிஜிட்டல் தளம், புதிய வளர்ச்சி வாய்ப்புகள், தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளில் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக நிறுவனத்தின் சிஇஓ புனித் கோயங்கா தெரிவித்தார்.
மேலும் பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை வழங்குவது, ஊழியர்களுக்கான Truly Yours பங்குத் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாகவும் நீண்டகால மதிப்பை உருவாக்க நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
டிஜிட்டல் வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தொழில்நுட்பப் புதுமைகளைப் பயன்படுத்துதல் மற்றும் புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்தப் பங்குகள் திரும்பப் பெறும் நடவடிக்கை உதவும் என Zee Entertainment Enterprises நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் தனது இலக்குகளை நோக்கி வேகமாக முன்னேறி வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் சந்தையில் அதிக பங்களிப்பைப் பெறத் திட்டமிட்டுள்ளது. இதற்காகப் பங்குகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை, பங்களிப்பைப் பெற திட்டமிட்டுள்ளது. இதற்காக பங்குகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை, பங்குதாரர்களுக்குக் கூடுதல் வருவாயை வழங்க உதவும் என நிறுவனம் நம்புகிறது.
மேலும், பங்குதாரர்கள் மற்றும் நிறுவனத்துடன் தொடர்புடையவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது, நிறுவனத்தின் அடிப்படை வணிகத்தை வலுப்படுத்தவும், டிஜிட்டல் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் உதவும், தொழில்நுட்பப் புதுமைகளைப் பயன்படுத்தி, புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்குவதிலும், அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில் கவனம் செலுத்துவதிலும் நிறுவனம் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளது.