SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

உருவாகிறது புதிய புயல்.. கனமழை வெளுக்கப்போகுது.. தமிழகத்திற்கு ஆபத்தா?

தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 12ஆம் தேதி உருவாகக் கூடும். தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, நவம்பர் 15ஆம் தேதி வாக்கில் புதிய புயல் உருவாகக் கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.

Written By Umabarkavi K
Published: Nov 10, 2026, 08:13 IST | Updated: Nov 10, 2026, 08:21 IST
Join

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.  வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா என பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. தீபாவளி பண்டிகை வரையும் மழை பெய்ததது. கடந்த மாதம் அக்டோபர் 1ஆம் தேதி  முதல் நேற்று வரையிலான நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட மழைப்பொழிவு 4 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.

உருவாகிறது புயல் சின்னம்

அதாவது, 25.4 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, அர்னாப், முரசு என இரண்டு புயல்கள் ஆந்திராவை நோக்கி தாக்கியது. ஆனால், தமிழகத்தை நோக்கி இதுவரை எந்த புயலும் தாக்கவில்லை. இந்த நிலையில், வங்கக்கடலில்  புதிய புயல் உருவாக உள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "தென்கிழக்கு வங்ககடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

மேலும் படிக்க: பயணிகளுக்கு குட் நியூஸ்! 1,000 புதிய ஏசி பேருந்துகள்.. எங்கு தெரியுமா? CM விஜய் அறிவிப்பு

தமிழகத்திற்கு ஆபத்தா?

தொடர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை 3ம் சுற்று வடகிழக்கு பருவமழை தீவிரமடையக் கூடும். தென்கிழக்கு வங்ககடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, நவம்பர் 15ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று. புயல் சின்னமாக உருவெடுக்கும்.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மீனவர்கள் நவம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை கடலுக்கு செல்லக்கூடாது.

ஆழ் கடலுக்கு சென்றிருக்கும் மீனவர்கள் நவம்பர் 13ம் தேதி இரவுக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தீபாவளி பண்டிகை முடிந்து தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் அடுத்த 3 நாட்களில் அதிகபட்சம் 4 நாட்களுக்குள் கரை திரும்ப வேண்டும். இச்சலனம் புயலாக மாறுமா என்பது நவம்பர் 13ம் தேதி உறுதிப்படுத்தலாம். இச்சலனம் காரணமாக வடதமிழகம், காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைய சாதக நிலை காணப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சாலையில் பட்டாசு வெடித்த போதை கும்பல்.. தட்டிக்கேட்ட எஸ்ஐ கொடூர கொலை.. தேனியில் ஷாக்

இன்று எங்கெல்லாம் கனமழை?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்று (நவம்பர் 10) இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நவம்பர் 11ஆம் தேதியான நாளை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.

மேலும் படிக்க: வெற்றி வீடு திட்டம்: 70,000 குடும்பங்களுக்கு இலவச வீடு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? CM விஜய் அறிவிப்பு
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES