• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

Anirudh Kavya Maran : சமீபத்தில் அனிருத்-காவ்யா திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து, இந்த திருமண ஏற்பாடுகளுக்கு ஆன செலவு என்ன என்பது குறித்த விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 23, 2026, 10:33 IST|Updated: Nov 23, 2026, 10:41 IST
joinshare
அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..
Image Credit: Anirudh Kavya Maran | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

2

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

3

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

4

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

5

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

“பெரிய வீட்டு கல்யாணம் பெரிய வீட்டு கல்யாணம்தான்பா..” என்பது போலபல விஐபிக்களின் வருகைக்கு மத்தியில் பாதி சிம்பிள்-பாதி ஆடம்பரமாக நடந்து முடிந்துள்ளது அனிருத்-காவ்யா மாறன் திருமணம். இந்த திருமணத்தில் மக்களை ஈர்த்த விஷயங்கள் என்னென்ன, இந்த திருமணத்திற்கு ஆன செலவு என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

கிரீஸில் நடந்த காவ்யா - அனிருத் திருமணம்..!

இந்தியாவின் ராக்ஸ்டாராக விளங்கும் அனிருத்திற்கும், தொழிலதிபர் காவ்யா மாறனுக்கும் நவம்பர் 11ஆம் தேதி, கிரீஸில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தாலி இல்லாமல், மாலை மாற்றிக்கொண்டு, செயின் போட்டுக்கொண்டு காவ்யாவும் அனிருத்தும் சுய மரியாதை திருமணம்  செய்து கொண்டனர். வெளிநாட்டில் திருமணம் நடந்ததை அடுத்து, அடுத்த 10 நாட்களுக்குள் இவர்களின் திருமண ரிசப்ஷனும் நடந்தது. திருமணத்திற்கு முன்பாகவும், வெளிநாட்டில் ரிசப்ஷன் நடந்தது. அதில் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | பிக்பாஸ் 10: எதிர்பாராத டபுள் எவிக்ஷன்! ரசிகர்கள் அதிர்ச்சி..யார் யார் தெரியுமா?

இரு நாட்களாக நடந்த ரிசப்ஷன்..!

அனிருத்-காவ்யா மாறன் திருமணம் ஒரு நாளில் நடந்து முடிந்து விட்டாலும், இவர்களின் திருமண ரிசப்ஷன், இரு நாட்கள் நடந்தது. முதல் நாளில், அரசியல் தலைவர்களுக்கும், சில சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இரண்டாம் நாளில் சில கிரிக்கெட் வீரர்களுக்கும், சில நெருங்கிய சினிமா பிரபலங்களுக்கும், பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முதல் நாளில், முதல்வர் விஜய், கமல்ஹாசன், கேரள முதல்வர் சதீசன், தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் அவர்களின் உறவினர்களும் இருந்தனர்.

இரண்டாம் நாள் ரிசப்ஷனில் எம்.எஸ்.தோனி, அவர் மனைவி சாக்ஷி, அனிருத்தின் நெருங்கிய நண்பர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன், நயன்தாரா, நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், அஜித் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ரொம்ப சிம்பிளா இருக்கே..

கலாநிதி மாறனின் குடும்பம் நிறைய சொத்து மிக்கது என்பது அனைவருக்கும் தெரியும். இதையடுத்து, இவர்கள் வீட்டில் ஒரு திருமணம் நடக்கிறது எனும் பட்சத்தில், அது கண்டிப்பாக பிரம்மாண்டமாக இருக்கும் எனவும், தடபுடலாக பல ஏற்பாடுகள் இருக்கும் என்றும் மக்கள் கருதினர். ஆனால், அதற்கு நேர்மாறாக, இவர்களின் திருமணம் சிம்பிளாக நடந்தார் பேல இருந்ததாக நெட்டிசன்கள் பலர் குமுறி வந்தனர்.

காவ்யா மாறனின் ஆடை கலையில்லை என்றும், ஏற்பாடுகள் எதிர்பார்த்தது போல இல்லை என்றும் பலர் கூறி வந்தனர். அதே சமயத்தில், “அவர்களுடைய திருமணம், எப்படி அதை நடத்த வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்ற எண்ணமும் ஒரு சிலருக்கு இருந்தது. ஆனால், கிரீஸில் திருமணம் முடித்து, தொடர்ந்து இரு நாட்கள், ஒரு நட்சத்திர விடுதியில் திருமண வரவேற்பு நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதும் நமக்கு தெரியும். இருந்தாலும், அம்பானி வீட்டு திருமணத்தி பார்த்து விட்டு, “ச்சே..நம்ப தமிழ்நாட்டுல அந்த மாதிரி ஒரு கல்யாணம் நடக்கலையே” என்ற அங்கலாயப்புதான் பலருக்கு இருக்கிறது.

திருமணத்திற்காக ஆன செலவு..!

காவ்யா மாறன் - அனிருத் திருமணத்திற்கான செலவு, ரூ.100 கோடி என கூறப்படுகிறது. இது கிரீஸ் நாட்டில் நடந்த திருமணத்திற்கு மட்டும் ஆன செலவாம். சென்னையில் நடந்த திருமண வரவேற்பிற்கு, ரூ.50 கோடி செலவு என்றும், இந்த திருமணத்திற்கு மொத்தம் ரூ.150 கோடி வரை செலவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | உதயநிதியை பார்த்ததும் கடுப்பான தேவயானி..? ”தள்ளுங்க..” கூட்டத்தை முறைத்து வெளியேறிய வீடியோ..

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema