SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

போலீசாரை மிரட்டி கத்தியால் வெட்ட முயற்சி! போதை இளைஞரின் வெறிச்செயல்..

செங்குன்றத்தில் பட்டாகத்தியுடன் ரகளை – காவல் உதவி ஆய்வாளரையே வெட்ட முயன்ற போதை இளைஞர் தற்காத்துக்கொள்ள பெல்ட்டைக் கழற்றிய எஸ்.ஐ.

Written By Yuvashree M
Published: Nov 06, 2026, 06:31 PM IST | Updated: Nov 06, 2026, 06:43 PM IST
Image Credit: Crime News | X Page
Join

சென்னை அடுத்த செங்குன்றம் காவல் நிலையம் அருகே உள்ள செங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில், மது போதையில் பட்டாகத்தியுடன் இளைஞர் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அடுத்த சில நிமிடங்களிலேயே இரண்டு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கையில் பட்டாகத்தியுடன் ரகளையில் ஈடுபட்டிருந்த இளைஞரை பிடிக்க முயன்றுள்ளனர்.

காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர்..!

அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர்.ஆனால், போலீசாரின் பேச்சைக் கேட்க மறுத்த அந்த இளைஞர், "என்னையே பிடிக்க வருகிறாயா? உன்னை சும்மா விடமாட்டேன்" என மிரட்டியதுடன், கையில் வைத்திருந்த கத்தியால் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாரை வெட்ட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

இதனால் அதிர்ச்சியடைந்த காவல் உதவி ஆய்வாளர், செந்தில்குமார் இளைஞரிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளார். முதுகைக் காட்டி ஓடாமல், எதிர்கொண்டபடியே நகர்ந்து சென்ற அவர், தனது சீருடையில் இருந்த பெல்ட்டைக் கழற்றி, கத்தியால் தாக்க வந்த இளைஞரை எதிர்கொண்டு தற்காப்பு செய்து கொண்டார்.

போலீசாருக்கே பாதுகாப்பு இல்லையா?

இதற்கிடையே மற்றொரு காவலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் கூடுதலான காவலர்கள் வரவைக்கப்பட்டு பொதுமக்களின் உதவியுடன் அந்த இளைஞரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் மதுபோதையில் இருந்ததும், அவரது பெயர் தினேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் பிடித்து வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையம் அருகிலேயே கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டு, காவல் உதவி ஆய்வாளரையே வெட்ட முயன்ற சம்பவம் செங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாருக்கே பாதுகாப்பு இல்லையா? என்ற கேள்வியை எழுப்பும் இந்த அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் படிக்க | ”ஒரு வருஷம் பொறுங்க.. விஜய் அண்ணன் ஆட்டம் தெரியும்".. எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES