• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தவெக வெற்றிக்கு கைகொடுத்த எஸ்ஐஆர்? ஆய்வில் ஷாக் தகவல் - Explained

தவெக வெற்றிக்கு கைகொடுத்த எஸ்ஐஆர்? ஆய்வில் ஷாக் தகவல் - Explained

SIR Explained: எஸ்ஐஆர் காரணமாக, தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதாக ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. தி இந்து பிசினஸ்லைன் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், தமிழக சட்டமன்ற தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 06, 2026, 10:17 AM IST|Updated: Oct 06, 2026, 10:51 AM IST
joinshare
தவெக வெற்றிக்கு கைகொடுத்த எஸ்ஐஆர்? ஆய்வில் ஷாக் தகவல் - Explained

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ஆதாரில் பெயர் மாற்ற புது ரூல்ஸ்.. இனி இந்த ஆவணங்கள் கட்டாயம் - UIDAI அதிரடி

ஆதாரில் பெயர் மாற்ற புது ரூல்ஸ்.. இனி இந்த ஆவணங்கள் கட்டாயம் - UIDAI அதிரடி

2

PNR விதிகளில் மாற்றம்: டிசம்பர் முதல் மாறும் செயல்முறை..... ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்

3

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது : மு.க ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!

4

IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: கை நிறைய சம்பளம்..... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5

தவெக வெற்றிக்கு கைகொடுத்த எஸ்ஐஆர்? ஆய்வில் ஷாக் தகவல் - Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

SIR Explained: நாடு முழுவதும் எஸ்ஐஆர் எனும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. நாடு முழுவதும்  எஸ்ஐஆர் பணிகள் நடந்து வருகிறது. எஸ்ஐஆர் பணிகள் மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. இதனால், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 20 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இதற்கிடையில், எஸ்ஐஆர் பணிகள்,  புதிய வாக்காளர்கள் சேர்க்கும் படிவம் 6ல் திருத்தம் போன்ற விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதற்கு தேர்தல் ஆணையர்கள் இருவரும் ஆட்சபனை  தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், எஸ்ஐஆர் காரணமாக, தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதாக ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

எஸ்ஐஆர் தாக்கம்

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்றது. தவெக கடந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எஸ்ஐஆர் காரணமாகவே தவெக வெற்றி வெற்றிருக்கலாம் ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. எஸ்ஐஆரில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுக தோல்விக்கு முக்கிய காரணம் என ஸ்டாலின் கூறியிருந்தார். திமுகவுக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்ச்சி நீக்கப்பட்டதாக திமுகவினர் குற்றச்சாட்டி இருந்தனர்.

இந்த சூழலில், எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் வாக்காளர்கள் குறைந்ததையும், சட்டமன்ற தேர்வு முடிவுகளையும் ஒப்பிட்டு தி இந்து பிசினஸ்லைன் பத்திரிகை ஆய்வு மேற்கொண்டது. இதில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அதாவது, எஸ்ஐஆர் மூலம் குறைந்த வாக்காளர் நீக்கப்பட்ட தொகுதிகளில் திமுக அதிகளவில்  வென்றுள்ளளது என்றும் அதிக அளவு வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் அதிகளவில் தவெக வெற்றி பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தாராபுரம் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு.. பகீர் கிளப்பிய திமுக.. தவெக விளக்கம்

தவெக, திமுக வென்ற இடங்கள்

  • மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே 10,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதல் திமுக 7 இடங்களிலும், தவெக 2 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், இதர கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
  • இதேபோல, 80 தொகுதிகளில் 10,000 முதல் 20,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில் திமுக 20 இடங்களிலும், தவெக 22 இடங்களிலும், அதிமுக 24 இடங்களிலும், இதர கட்சிகள் 14 இடங்களில் வெற்றி பெற்றன.
  • 66 தொகுதிகளில் 20,000 முதல் 30,000 வரை வாக்காளர்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதில் திமுக 21 தொகுதிகளிலும், தவெக 32 தொகுதிகளிலும், அதிமுக 11 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
  • 37 தொகுதிகளில் 30,000 முதல் 50,000 வாக்காளர்கள் குறைக்கப்பட்டதாகவும், இதில் 24 தொகுதிகளில் தவெக, 8 இடங்களில் திமுக, 5 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றன.
  • 22 தொகுதிகளில் 50,000 முதல் 80,000 வாக்காளர்கள் குறைக்கப்பட்டன. இதில் 18 இடங்களில் தவெக, 3 இடங்களில் திமுக, அதிமுக 1 இடங்களில் வெற்றி பெற்றன.
  • 10 தொகுதிகளில் 80,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் குறைக்கப்பட்டதில், 10 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் நடவடிக்கை மேற்கொண்டே போதே, எதிர்க்கட்சிளை வீழ்த்துவதற்காக நடக்கிறது என குற்றச்சாட்டை திமுக உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்தனர். இதற்கு முக்கிய ஆதாரமாக இந்த புள்ளி விவரம் பார்க்கப்படுகிறது.  2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில், சராசரியாக சுமார் 27,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. 2021-ல் திமுக வெற்றி பெற்ற தொகுதிகளில், சராசரியாக சுமார் 31,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எப்படி வாக்களிக்கலாம்?

தமிழகத்தில் எஸ்ஐஆரில் எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?

தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றன. இதில் 74.07 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் தற்போது 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர. இதில் 2,89,60,838 பெண் வாக்காளர்கள், 2,77,38,925 ஆண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 வாக்காளர்கள் உள்ளனர்.  

இதில் 10 சதவீதத்திற்கு மேல் 10 மாவட்டங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.  10 மாவட்டங்களில் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 26 தொகுதிகளில் 25 சதவீதம் அல்லது அதற்கு குறைவான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6 தொகுதிகளில் 33 சதவீதத்துக்கு மேல் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம்எஸ்ஐஆர் முன்எஸ்ஐஆர் பின்சதவீதம்
சென்னை     40.04 லட்சம்
 
28.30 லட்சம்
 
29.3%
திருப்பூர்24.44 லட்சம்
 
19.55 லட்சம்
 
20%
செங்கல்பட்டு27.87 லட்சம்
 
22.60 லட்சம்
 
18%
கோவை32.25 லட்சம்
 
26.96 லட்சம்
 
16.4%
காஞ்சிபுரம்19.34 லட்சம்
 
11.92 லட்சம்
 
14.9%
திண்டுக்கல்14.01 லட்சம்16.72 லட்சம்
 
13.06%
வேலூர்13.03 லட்சம்
 
11.33 லட்சம்
 
13%
ஈரோடு19.97 லட்சம்
 
17.40 லட்சம்
 
12.9%
திருவள்ளூர்35. 82 லட்சம்
 
31.57 லட்சம்
 
11.9%
திருநெல்வேலி14.18 லட்சம்12.53 லட்சம்
 
11.6%

உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றத்தல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டதால் நிரூபணமானால், அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள் ரத்து செய்யப்படும். வாக்காளர் பெயர் சேர்த்தல் படிவம் 6ல் திருத்தம் செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தரவில்லை.

ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட பின், படிவம் 6ல் யார் திருத்தம் செய்தார்கள் என்பதை அறிய விரும்புகிறோம் என உச்ச நீதிமன்றம் கூறியது. எனவே, ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டதால் உறுதி செய்யப்பட்டால், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு நடத்தப்பட்ட தமிழக சட்டப்பேரவை தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க: இனி கிராமுக்கு ரூ.10,000.. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்குவோருக்கு ஜாக்பாட்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer