SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விலைவாசியை குறைங்க, பட்டினியா கிடக்க முடியல... விதவை பெண்ணின் தர்ணா போராட்டம்

'இலவசங்கள் வேண்டாம்… வாழ்வதற்கு ஒரு வேலை கொடுங்கள்' என விதவை பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன் சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written By Sudharsan G
Published: Oct 24, 2026, 06:48 PM IST | Updated: Oct 24, 2026, 06:59 PM IST
Join

'இலவசங்கள் வேண்டாம்… வாழ்வதற்கு ஒரு வேலை கொடுங்கள்' எனக் கோரி, கணவனை இழந்த பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன் சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சிவகங்கை விஸ்வநாததாஸ் நகரைச் சேர்ந்தவர் பானுப்பிரியா. கணவரை இழந்து கடந்த 6 மாதங்களாக இவர் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருவதாகக் கூறப்படுகிறது.

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட காரணங்களால் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனது 5 வயது மகனுடன் சிவகங்கை பேருந்து நிலையத்தின் நுழைவாயில் முன்பு திடீரென சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க | மனு போடவே வேண்டாம்... வீடு தேடி வரும் சேவைகள்! தமிழக அரசின் புதிய வெற்றி இ-சேவை 2.0 திட்டம்!

இலவசங்கள் வேண்டாம்...

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "இலவசங்கள் எதுவும் வேண்டாம்; எனக்கும் என் மகனுக்கும் வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் அரசு வேலை வழங்க வேண்டும்" என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தார். ஒட்டு போட்டது இதற்குதானா என முதலமைச்சர் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பினார்.

மேலும், கணவரை இழந்து தனக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில், அன்றாட உணவுக்கே சிரமப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், விலைவாசி உயர்வால் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும் தனது வேதனையை தெரிவித்தார். தனக்கு ஏதாவது ஒரு வேலை வழங்கி, தனது மகனை வளர்க்க உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். விலைவாசியை குறைங்கடா... பட்டினியா கிடக்க முடியல... என அலறும் அவரது வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்குத் குட்நியூஸ்! திருமண முன்பணம் விதிமுறையில் முக்கிய மாற்றம்

சமாதானம் செய்த போலீசார்

பேருந்து நிலைய நுழைவாயிலில் நடைபெற்ற இந்த தர்ணா காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், அங்கிருந்த பொதுமக்களும் பெண்ணிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து அவரை அழைத்துச் சென்றனர்.

உதவி கேட்பதற்குப் பதிலாக உழைத்து வாழ்வதற்கு வேலை கேட்டு, 5 வயது மகனுடன் தாய் நடத்திய இந்தப் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவரை இழந்து வாழ்வாதாரத்திற்காகப் போராடும் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற பானுப்பிரியாவின் கோரிக்கை பொதுமக்களிடையே கவனம் ஈர்த்தது.

பணவீக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்

நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில்தான் 6.81% ஒட்டுமொத்த சில்லறைப் பணவீக்கம் பதிவாகி உள்ள நிலையில், தேசியப் பணவீக்க விகிதமே 5.54% தான். 10.62% உணவுப் பணவீக்கத்துடன், நாட்டிலேயே அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட மாநிலங்களிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | இனி EB ரீடிங் எடுக்க ஆள் வரத் தேவையில்லை: தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES