• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? ரூ.25 லட்சம் கடனுதவி - தமிழ்நாடு அரசு Explained

சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? ரூ.25 லட்சம் கடனுதவி - தமிழ்நாடு அரசு Explained

Tamil Nadu Government TABCEDCO Loan : தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் டாப்செட்கோ (TABCEDCO) மூலம் குறைந்த வட்டியில் தொழில் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 30, 2026, 07:23 AM IST|Updated: Sep 30, 2026, 03:25 PM IST
joinshare
சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? ரூ.25 லட்சம் கடனுதவி - தமிழ்நாடு அரசு Explained
Image Credit: Tamil Nadu Government TABCEDCO Loan

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government TABCEDCO Loan : தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO - டாப்செட்கோ) மூலம் 2026–27 ஆம் ஆண்டிற்கான பல்வேறு குறைந்த வட்டி கடனுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுயதொழில் தொடங்க விரும்புவோர், பெண்கள் மற்றும் மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் இணைந்து இத்திட்டங்களை விரிவுபடுத்தி வருகின்றன. மாவட்ட வாரியாக சிறப்பு லோன் முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

டாப்செட்கோ கடன் திட்டங்களின் முக்கிய வகைகள்:

தனிநபர் கடன் திட்டம் : பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய தனிநபர்கள் தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 7% முதல் 8% வரையிலான மிகக் குறைந்த வட்டியில், 3 முதல் 6 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தும் வசதியுடன் இக்கடன் கிடைக்கிறது.

மகளிர் மற்றும் சுய உதவிக் குழுக்கள் கடன்: குழுவில் உள்ள உறுப்பினர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையிலும், ஒரு சுய உதவிக்குழுவுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.

சிறு தொழில் கடன் கறவை மாட்டுக் கடன்: பாரம்பரிய தொழில்கள், குறுந்தொழில்கள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கறவை மாடுகள் வாங்கவும் இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  

கல்விக் கடன் திட்டம்: மாணவர்கள் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பயில்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.  

இக்கடன் உதவியைப் பெற்று என்னென்ன தொழில்கள் தொடங்கலாம்?

டாப்செட்கோ நிதி உதவியின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பலதரப்பட்ட சுயதொழில்களைத் தொடங்க வாய்ப்புள்ளது:

சிறு வணிகம் மற்றும் வர்த்தகம்:

மளிகைக் கடை, பல்பொருள் அங்காடி, ஆடைகள் மற்றும் ரெடிமேட் ஜவுளி வியாபாரம், ஜெராக்ஸ், ஆன்லைன் சேவை மையம் மற்றும் கணினி மையம், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் மொத்த / சில்லறை விற்பனை, பேக்கரி, டீ மற்றும் சிற்றுண்டி உணவகம்

விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள்:

கறவை மாடு வளர்ப்பு மற்றும் பால் பண்ணை அமைத்தல், ஆடு, நாட்டுக்கோழி வளர்ப்புப் பண்ணை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துக் கடை, நவீன பாசனக் கருவிகள் மற்றும் வேளாண் உபகரணங்கள் வாங்குதல்

உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டு தொழில்கள்:

மாவு மில், மசாலா பொடி அரைக்கும் தொழில், மரச் செக்கு எண்ணெய் தயாரிப்பு, தையல் கலைக்கூடம் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு யூனிட், மரவேலைப்பாடு, ஃபர்னிச்சர் பட்டறை மற்றும் இரும்பு கிரில் வெல்டிங் பட்டறை

சேவை மற்றும் பழுதுபார்ப்புத் தொழில்:

ஆட்டோ, கார், இலகுரக சரக்கு வாகனங்கள் வாங்கி இயக்குதல்

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனப் பழுதுபார்ப்புப் பட்டறை

எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பொருட்கள் விற்பனை மற்றும் பழுதுபார்ப்பு நிலையம்

பெண்களுக்கான அழகு நிலையம் மற்றும் அழகுக்கலை பயிற்சி மையம்

தகுதிகளும் விண்ணப்பிக்கும் முறையும்:

தகுதி: விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் பிரிவைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 60 ஆண்டிற்குள் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் அரசு நிர்ணயித்த உச்சவரம்பிற்குள் இருக்க வேண்டும்.  

தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, திட்ட அறிக்கை மற்றும் வங்கி பாஸ்புக் நகல்.

விண்ணப்பிக்கும் இடம்: தகுதியுள்ள நபர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (DCCB), நகர கூட்டுறவு வங்கி அல்லது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பயன்பெறலாம். விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான tabcedco.tn.gov.in மூலமாகவும் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer