SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

10, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... ரிசல்ட் எப்போது? கோடை விடுமுறை விவரம்

TN 10,12th Board Exam Timetable: தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார். எனவே, 10,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வ அட்டவணை, பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 14, 2026, 12:46 PM IST | Updated: Oct 14, 2026, 01:31 PM IST
Join

TN 10,12th Board Exam Timetable: தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆயுத்தமாகும் வகையில், அவர்களுக்கான தேர்வு அட்டவணை 5 மாதங்களுக்கு முன்பே ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026-27ஆம் கல்வியாண்டில் 10,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார்.

10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

பள்ளிக்கல்வத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2027 மார்ச் 3ஆம் தேத முதல் 2027 மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2027  மார்ச் 17ஆம் தேதி முதல் 2027 ஏப்ரல் 12ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. மேலும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் 2027 மே 7ஆம் தேதியும்,   10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2027 மே 20ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பாட வாரியாக தேர்வு அட்டவணை

தேதி  கிழமைபாடம்
2027, மார்ச் 17   
 
புதன்கிழமைதமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
 
2027, மார்ச் 25வியாழன்கிழமைஆங்கிலம்
2027, மார்ச் 31
 
புதன்கிழமைகணிதம்
 
2027, ஏப்ரல் 5
 
திங்கள்கிழமைஅறிவியல்
2027, ஏப்ரல் 9
 
வெள்ளிகிழமைசமூக அறிவியில்
 
2027, ஏப்ரல் 12 
 
திங்கள்கிழமை

விருப்ப மொழி

 

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

+2 பாட வாரியாக தேர்வு அட்டவணை

தேதி  கிழமைபாடம்
2027, மார்ச் 3 
 
புதன்கிழமைதமிழ் மற்றும் இதர மொழிப்படங்கள்
2027, மார்ச் 8   திங்கள்கிழமைஆங்கிலம்
2027, மார்ச் 12   வெள்ளிகிழமை

வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்

 

2027, மார்ச் 15 திங்கள்கிழமைகணினி அறிவியல், புள்ளியியல்
2027, மார்ச் 19    வெள்ளிகிழமைஉயிரியியல், தாவரவியல், வரலாறு
 
2027, மார்ச் 23 செவ்வாய் கிழமைஇயற்பியல், பொருளாதாரவியல்
2027, மார்ச் 29திங்கள்கிழமைகணிதம், விலங்கியல், வணிகவியல்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக,  காலை 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாள் படிப்பதற்கான அவகாசம் கொடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி, கோடை விடுமுறை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  மார்ச் 30ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கப்பட உள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES