SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் "பெண் குழந்தைகள் தின மாநில விருதுக்கு" விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.

Written By Karthikeyan Sekar
Published: Nov 24, 2026, 12:15 IST | Updated: Nov 24, 2026, 12:19 IST
Image Credit: Tamil Nadu Girl Child Award Latest announcement
Join

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமாக ஜனவரி 24-ல் மாநில அரசின் விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விருதினை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருதினை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள்:

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் 13 வயதிற்கு மேல் 18 (31 டிசம்பர்-ன் படி) வயதிற்குட்பட்ட பெண் குழந்தை. கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல். பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு. பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல். வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.

மேலும் படிக்க | இலவச மென்பொருள் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

விருது:

மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் மேற்காண் அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு. ஒரு பாராட்டு பத்திரம். ரூ.1,00,000/-ற்கான காசோலை வழங்கப்படும். தேர்வுக் குழு: மாநில அளவிலான தேர்வுக் குழு மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை கூர்ந்தாய்ந்து மேற்காண் விருதினை பெற உரிய நபரை தேர்ந்தெடுக்கப்படுவார்.

வழிமுறைகள்:

மேற்படி விருதினை பெற உரிய முன்மொழிவுகளை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் (ஒ.கு.வ.தி பணிகள்), காவல்துறை மற்றும் தகுதியான பெண் குழந்தைகள் இருப்பின் விண்ணப்பம் செய்ய குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் மூலம் பரிந்துரைக்கலாம். பரிந்துரையில் குழந்தையின் பெயர், தாய்/தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.

2026-2027-ஆம் ஆண்டின் பெண் குழந்தைகள் தின மாநில விருதுக்கு விண்ணப்பிப்பதற்குரிய விதிமுறைகள்: இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி (https://awards.tn.gov.in), இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:15.12.2026. இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

கையேட்டில் இணைக்கப்பட வேண்டியவை:

இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் உயர் தரவு (Bio Data), சுயசரிதை (ம) Passport size photos - 2, ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (Bulletin Points) (தமிழ் – மருதம் மற்றும் ஆங்கிலம்), தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம் / விருதின் பெயர் / யாரிடமிருந்து பெறப்பட்டது மற்றும் பெற்ற வருடம்), கையேட்டில் விருது பெற்ற புகைப்படம், சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு. இணைப்பு – படிவம் ( தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) முழுமையாக பூர்த்தி செய்து இணைக்கப்பட வேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு, கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES