• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /இனி இவர்களுக்கும் தங்க மோதிரம் கிடைக்கும்... விதியை தளர்த்திய தமிழ்நாடு அரசு

இனி இவர்களுக்கும் தங்க மோதிரம் கிடைக்கும்... விதியை தளர்த்திய தமிழ்நாடு அரசு

Thaimaman Thanga Modhiram Thittam: தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின்கீழ் பயனடைவார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தின் விதி தளர்த்தப்பட்டுள்ளது.

Written BySudharsan G
Published: Oct 07, 2026, 08:18 PM IST|Updated: Oct 07, 2026, 08:27 PM IST
joinshare
இனி இவர்களுக்கும் தங்க மோதிரம் கிடைக்கும்... விதியை தளர்த்திய தமிழ்நாடு அரசு
Image Credit: Thaimaman Thanga Modhiram Thittam, CM Vijay | Image Source : X/@TNDIPR

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இனி இவர்களுக்கும் தங்க மோதிரம் கிடைக்கும்... விதியை தளர்த்திய தமிழ்நாடு அரசு

இனி இவர்களுக்கும் தங்க மோதிரம் கிடைக்கும்... விதியை தளர்த்திய தமிழ்நாடு அரசு

2

அக்டோபர் 10 டெல்லி போராட்டம்: ஜனநாயகத்தைக் காக்க ஜந்தர் மந்தருக்கு வாருங்கள்! மாணவர் அமைப்பு அழைப்பு

3

Explainer: ரெப்போ விகிதத்தை அதிகரித்த RBI... கடன் EMI-ஐ குறைக்க உதவும் 4 எளிய வழிகள்

4

மாணவியிடம் அத்துமீறிய காங்கிரஸ் எம்எல்ஏ... பேருந்தில் நடந்தது என்ன? ஷாக் வீடியோ

5

5 மாடி கட்டடம் இடிந்து விபத்து... இடிபாடுகளில் சிக்கிய பொதுமக்கள் - டெல்லியில் மீண்டும் ஷாக்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Thaimaman Thanga Modhiram Thittam: தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' கடந்த செப். 28ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். ஜூன் 22ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராமில் 22 கேரட் தங்கத்தில் மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல், செப்டம்பர் 27ஆம் தேதிவரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த சுமார் 1.07 லட்சம் குழந்தைகளுக்கும் தங்கம் மோதிரம் வழங்கும் பணி 102 சீமாங் மையங்கள் மூலம் தொடங்கப்பட்டது. இந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் இடம் மற்றும் தேதி குறிப்பிடப்பட்ட 'தங்க மோதிரம் பெறுவதற்கான அடையாள அட்டை' அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்களால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரங்கள்

நிபந்தனையில் தளர்வு

அதேநேரத்தில், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் மருத்துவமனைகளில் இருநது வீடு திரும்பும்போது அந்தந்த அரசு மருத்துவமனைகலில் தங்கம் மோதிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் முக்கிய நிபந்தனையில் தளர்த்தப்பட்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பயன்பெற, "திருமணமாகி வெளி மாநிலம் சென்ற பெண்ணின் பெற்றோர் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவர் எனில் மோதிரம் பெறலாம்" என தெரிவிக்கப்படடுள்ளது.

தற்போதைய விதி

ஜூன் 23ஆம் தேதி தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின்கீழ் பயனடைவார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படியிருக்க, தமிழ்நாட்டுப் பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் வேறு மாநிலத்தில் வசித்து வந்தாலும், அவரது பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசித்து வரும் நிலையில், பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ளும் சில நிகழ்வுகள் அரசின் கவனத்திற்கு வந்தன.

இத்தகைய ஒரு நிகழ்வாக, உமா மகேஸ்வரி என்பவர் திருமணமாகி கர்நாடகா மைசூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரியில் கணவருடன் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆவின் பால் தட்டுப்பாடு உண்மையா? விசிட் அடித்த CM விஜய் - அமைச்சர் சொன்ன விளக்கம்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | https://t.co/35qvcGxUS1

— TN DIPR (@TNDIPRNEWS) October 7, 2026

பிரசவத்திற்காக தனது பெற்றோர் வசிக்கும் தமிழ்நாட்டிற்கு வந்த உமா மகேஸ்வரி கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அன்று காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். நிபந்தனைகளின்படி, தற்போது நடைமுறையில் இருக்கும் பிரசவித்த தாயார் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாக, ஆரம்பத்தில் இக்குடும்பத்தினர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் பயனடைய இயலாத நிலை ஏற்பட்டது.

ஜூன் 22ஆம் தேதி முதல்...

இதனைக் கருத்தில் கொண்டு, அரசு இத்திட்டத்தின் நிபந்தனைகளை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலத்திற்கு சென்றிருந்தாலும், அத்தாயின் தாய் தந்தையர் இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்கான உரிய ஆவண ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அந்த குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் உடன் வழங்கப்படும்" அறிவிக்கப்பட்டது. இந்த திருத்தம் ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும்.

மோதிரம் வழங்கப்பட்டது

இதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவித்த உமா மகேஸ்வரியின் குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் இன்று (அக். 7) வட்டார மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | TNPSC குரூப் 4 தேர்வு.. எந்த துறைக்கு எத்தனை காலிப் பணியிடங்கள்? எந்த வயது வரை விண்ணப்பிக்கலாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy