SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழக அரசின் 3 நாள் செல்போன் பழுதுநீக்கும் பயிற்சி முகாம்: சுயதொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!

Tamil Nadu Govt 3 Day Mobile Phone Repair Training: தமிழ்நாடு அரசின் செல்போன் பழுது நீக்கும் பயிற்சி முகாம் நடக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Nov 16, 2026, 16:02 IST | Updated: Nov 16, 2026, 16:07 IST
Image Credit: Tamil Nadu Govt 3 Day Mobile Phone Repair Training
Join

Tamil Nadu Govt 3 Day Mobile Phone Repair Training: தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான 3 நாள் செல்போன் பழுதுநீக்கும் மற்றும் சேவைப் பயிற்சி முகாமை அறிவித்துள்ளது. செல்போன் பழுதுநீக்கும் தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுக்கொண்டு, அதன் மூலம் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் வகையில் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 18 முதல் 20 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை ஈக்காட்டுத்தாங்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள இடிஐஐ அலுவலக சாலையில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.  

மேலும் படிக்க | தமிழக கால்நடை வளர்ப்போருக்கு டபுள் ஜாக்பாட்! எருமை + பன்றி வளர்க்க மானியம் - Explained

மூன்று நாள் பயிற்சியின் சிறப்பம்சங்கள்

இந்தப் பயிற்சி முகாமானது மூன்று நாட்களும் தனித்தனி தொழில்நுட்பப் பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாளில், மொபைல் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள், வன்பொருள் பாகங்கள் மற்றும் பழுதுகளைக் கண்டறிந்து சரிசெய்யும் முறைகள் குறித்துப் பயிற்றுவிக்கப்படும். இரண்டாம் நாளில், சிப் லெவல் சர்வீசிங், சாலிடரிங் நுட்பங்கள் மற்றும் மதர்போர்டு பழுதுகளைக் கண்டறிதல் ஆகியவை கற்றுத்தரப்படும். மூன்றாம் நாளில், மேம்பட்ட சார்ஜிங் சர்க்யூட் பழுதுநீக்கம், நெட்வொர்க் பிரச்சனைகளைச் சரிசெய்தல் மற்றும் மென்பொருள் தீர்வுகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்படும்.  

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சக் கல்வித் தகுதியாகப் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள், வேலை தேடுபவர்கள், தொழில்முனைவோராக விரும்புவோர் மற்றும் ஏற்கனவே செல்போன் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றுவோர் என அனைவரும் இதில் பங்கேற்கலாம். மேலும், இந்தப் பயிற்சியானது அனைத்துப் பாலினத்தவருக்கும் பொதுவானதாகும்.  

கூடுதல் சலுகைகள் மற்றும் முன்பதிவு விவரங்கள்

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பங்கேற்பாளர்களுக்குத் தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும். செயல்முறைப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்தப் பயிற்சியில், வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி வசதியும் செய்து தரப்படும்.  

இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் www.editn.in என்ற இணையதளம் மூலமாகத் தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்குத் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் 8668100181 அல்லது 9360221280 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனச் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES