SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு அமைச்சர் முக்கிய உத்தரவு: மீறினால் துறை ரீதியான நடவடிக்கை!

Tamil Nadu government rules : தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிகளை பாதியில் இறக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Nov 04, 2026, 07:49 AM IST | Updated: Nov 04, 2026, 07:52 AM IST
Join

Tamil Nadu government rules : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பயணிகளிடம் மரியாதையுடனும் கனிவுடனும் நடந்துகொள்ள வேண்டும் எனப் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் போக்குவரத்துக் கழகங்கள் நாள்தோறும் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி வரும் சூழலில், இந்நிறுவனம் பொதுமக்களுக்கான சேவைத் துறையாகச் செயல்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.  

மேலும் படிக்க  | புது வீடு கட்டுபவர்கள் இனி இதை செய்யாவிட்டால் சிக்கல்! அரசின் புதிய விதிமுறைகள் Explained

மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்களும் நடத்துநர்களும் நிர்ணயிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே வாகனங்களை முறையாக நிறுத்தி பயணிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்லவும், இறக்கிவிடவும் வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். பயணிகளை ஏற்ற மறுப்பது அல்லது பாதி வழியிலேயே இறக்கிவிடுவது போன்ற செயல்களில் எக்காரணம் கொண்டும் ஈடுபடக்கூடாது எனவும், பேருந்துகளை எப்போதும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  

பயணிகளுடனான அணுகுமுறை குறித்துப் பேசிய அமைச்சர், பேருந்துகளில் பயணிக்கும் அனைவரிடமும் மரியாதையுடனும், பொறுமையுடனும், நட்பான முறையிலும் நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். குறிப்பாகப் பெண்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நோயாளிகளிடம் கூடுதல் அக்கறையுடனும் கனிவுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாய அறிவுறுத்தலாக வழங்கப்பட்டுள்ளது.  

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் செயல்பாடுகள் தொடர்பாகப் பெறப்படும் புகார்கள், மனுக்கள், தொலைபேசி வாயிலான புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் புகார் பிரிவின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது சேவை விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தேவைப்படும் இடங்களில் அரசின் முன் அனுமதி பெற்றுத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

பேருந்து இயக்கம் மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளைக் கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் பொது மேலாளர்கள் கள அளவில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள், ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். மேலும், விழா காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அனைவரும், அந்தந்தப் பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக ஓய்வறைகளில் மட்டுமே தங்க வேண்டும் எனவும், பேருந்துகளிலோ அல்லது வேறு எங்குமோ தங்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

அதேவேளையில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும், பணியாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். மேலும், சிறப்பு ஆலோசகர்கள் மூலம் பணியாளர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் கருணை அடிப்படையில் தட்டச்சர் பணிக்கான பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.   
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES