• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கொலை களமாக மாறும் தென் மாவட்டங்கள்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. தீர்வு எப்போது முதல்வரே?

கொலை களமாக மாறும் தென் மாவட்டங்கள்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. தீர்வு எப்போது முதல்வரே?

TN Law And Order Explained: தென் மாவட்டங்களில் இந்தாண்டு (2026) இதுவரை 141 பேர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளது. இது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கேள்விக்குறியாக்குகிறது.

Written ByUmabarkavi K
Published: Sep 30, 2026, 04:47 PM IST|Updated: Sep 30, 2026, 05:47 PM IST
joinshare
கொலை களமாக மாறும் தென் மாவட்டங்கள்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. தீர்வு எப்போது முதல்வரே?
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Law And Order Explained: பொருளாதாரம், தொழில், கல்வி, நலத்திட்டங்கள் என அனைத்து துறைகளிலும் தமி தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது தற்போது பெரும் பிரச்னையாக உள்ளது.    தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. அந்தளவுக்கு தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தலைநகர் சென்னை, தென் மாவட்டங்களில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தென் மாவட்டங்களில் சாதிய கொலைகள், முன்பகை, பணப் பிரச்னை போன்ற காரணங்களால் பெண்கள், முதியோர்கள், இளைஞர்கள் என பலரும் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். தென் மாவட்டங்களில் கொலை நகரமாகவே மாறி வருகிறது. இந்த நிலையில், அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட் ஒன்று வெளியாகி உள்ளது.

கொலை களமாக மாறும் தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் மட்டும் 141 கொலைகள் நடந்துள்ளன.அதாவது, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 141 கொலைகள் நடந்துள்ளன. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து, திருநெல்வேலியில் 47 கொலைகளும் (இதில் 3 இரட்டை கொலைக உள்பட), தென்காசி மாவட்டத்தில் 20 கொலைகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 23 கொலைகளும் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதில் சாதிய கொலைகள் ஏராளமானவை நடந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சி நடந்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை கேள்வி கேட்டு, அதனை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, தங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்களை பற்றி முதல்வர் விஜய் மௌனம் காத்து வருகிறார். அதுவும் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், ஒரு குற்றம் நடந்தது என்பதற்காக ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்ல முடியாது என கூறியிருந்தார்.

மேலும் படிக்க: வித்யா ராமராஜிற்கு சீமான் வாழ்த்து! ‘தமிழர் புகழ் ஓங்கட்டும்..’ என பதிவு..

தனிப்பட்ட குற்ற சம்பவத்திற்கும் மாநிலத்தின் ஒட்மொத்த சட்டம் ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு உள்ளது என்று குறிப்பிட்ட அவர், காவல்துறை சுதந்திரமாக செயல்படும் என்றும் எந்தவித சமரசமும் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் கூறியிருந்தார். ஆனால், கடந்த திமுக ஆட்சியில் நடக்கும் கொலை மட்டும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என விமர்சித்தார். முதல்வரே உங்களுக்கே இது நியாயமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாவட்ட வாரியாக நடந்த கொலைகளின் எண்ணிக்கை

மாவட்ட வாரியாக நடப்பு ஆண்டில் எத்தனை கொலை சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

மாவட்டங்கள்கொலைகளின் எண்ணிக்கை
சென்னை
 
64 கொலைகள்
திருவள்ளூர்8 கொலைகள்
செங்கல்பட்டு
 
9 கொலைகள்
காஞ்சிபுரம்
 
16 கொலைகள்
கோவை32 கொலைகள்
ஈரோடு22 கொலைகள்
தருமபுரி17 கொலைகள்
சேலம்56 கொலைகள்
கிருஷ்ணகிரி33 கொலைகள்
நாமக்கல்24 கொலைகள்
கடலூர்23 கொலைகள்
விழுப்புரம்26 கொலைகள்
கள்ளக்குறிச்சி
 
16 கொலைகள்
நாகப்பட்டினம்12 கொலைகள்
தேனி25 கொலைகள்
திண்டுக்கல்
 
35 கொலைகள்
வேலூர்26 கொலைகள்
மதுரை62 கொலைகள்
விருதுநகர்49 கொலைகள்
சிவகங்கை22 கொலைகள்
ராமநாதபுரம்
 
15 கொலைகள்
தஞ்சாவூர்34 கொலைகள்
புதுக்கோட்டை
 
10 கொலைகள்
திருவண்ணாமலை
 
22 கொலைகள்
திருப்பத்தூர்
 
16 கொலைகள்
ராணிப்பேட்டை
 
10 கொலைகள்
திருப்பூர்26 கொலைகள்
நீலகிரி10 கொலைகள்
திருச்சி35 கொலைகள்
கரூர்7 கொலைகள்
திருவாரூர்
 
17 கொலைகள்
பெரம்பலூர்7 கொலைகள்
நெல்லை
 
47 கொலைகள்
தூத்துக்குடி
 
51 கொலைகள்
தென்காசி20 கொலைகள்
கன்னியாகுமரி23 கொலைகள்

நேற்று ஒரே நாளில் 8 கொலைகள்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 கொலைகள் நடந்துள்ளது. முன்பகை, பணப்பிரச்னை, மதுப்பழக்கம், இடத்தகராறு போன்ற காரணங்களில் நேற்று 8 பேர் கொலை செய்துள்ளனர்.

தலைநகர் சென்னையில் கொலை

சென்னை ஐஸ்அவுள் விஆர் பிள்ளை தெருவைச் சேர்ந்த அஜித் (27). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று தனது தாயுடன் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக அவரை வெட்டிக் கொலை செய்துள்ளது.  கொலை செய்யப்பட்ட அஜித்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஹரீஸ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இருதரப்பினரும் தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். இந்த இருதரப்பினரும் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. முன்விரோதம்  காரணமாக அஜித் கொல்லப்பட்டு இருக்கிறார்.

நெல்லையில் இரட்டை கொலை

திருநெல்வேலியில் நேற்று இரட்டை கொலை நடந்துள்ளது. நெல்லை டவுன் பகுதியில்  மகிழுந்து நிறுத்துவது தொடர்பான  மோதலில்  இருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையிலான மோதலில் டால்டன், நிகோலஸ் என்ற இரு சகோதரர்கள் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: தமிழ்நாடு மின்தடை.. நாளை (அக்டோபர் 01) எங்கெல்லாம்? லிஸ்ட் இங்கே!

திமுக பிரமுகர் கொலை

மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பணி முடிந்து வீடு திரும்பியபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.

கூலித்தொழிலாளி கொலை

மேலும், தேனி மாவட்டத்தில் கம்பத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கூலித் தொழிலாளி சந்தோஷ் குமார் (27) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில், இரண்டு பேர் சந்தோஷ் குமாரை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் கொலை

சேலம் பெரியபுதூரில் மதுபோதையில் குடிக்க பணம் கேட்டு தர மறுத்தால், பாட்டி பழனியம்மாளை, பேரன் விஜி (34) அடித்தே கொலை செய்துள்ளார். தடுக்க வந்த  தாத்தா, தந்தையையும் தாக்கிய அவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே செய்வினை செய்ததாக சித்தி சரசம்மாவை (50) கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவரின் அண்ணன் மகனான சலூன் கடைக்காரர் அசோக் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை மேக்காமண்டபம் அருகே உள்ள கடமலைகன்றுவில் தங்கலீலா (67) என்பவரை அவரது மகன் சிபி (37) என்பவர் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். மதுகுடிக்க பணம் தராததால் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீர்வு எப்போது?

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்கும் போது மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? என்ற கேள்வி தான் எழுகிறது. தமிழகத்தில் காவல்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சட்டம்- ஒழுங்கை நிலை நிறுத்துவதும்,  மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் அவரது கடமை ஆகும். எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கில் முதல்வர் விஜய் நேரடியாக கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றனர்

மேலும் படிக்க: புதிய கேஸ் சிலிண்டர்களுக்கு தடை, அதிக விலைக்கு விற்பனையா? அன்புமணி கடும் கண்டனம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer