SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சாலையில் பட்டாசு வெடித்த போதை கும்பல்.. தட்டிக்கேட்ட எஸ்ஐ கொடூர கொலை.. தேனியில் ஷாக்

Theni SI Murder: தேனியில் சாலையை மறித்த்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த போதை இளைஞர் கும்பலை தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளரை தாக்கி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Written By Umabarkavi K
Published: Nov 09, 2026, 10:47 AM IST | Updated: Nov 09, 2026, 11:31 AM IST
Join

Theni SI Murder: தேனி மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி திருநாளில் நடந்த கொலை, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. தேனி உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தர் ஆக பணியாற்றி வந்தவர் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் (56). அல்லிநகரம் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இவர் தனது பணியை முடித்து  தனது வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்தார்.

தேனியில் எஐ கொலை

அப்போது தேனி சமதர்மபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது மது போதையில் இருந்த ஒரு கும்பல் சாலையை மறித்து  பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். இதனை கண்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில் குமார் போதை கும்பலிடம் சாலையை மறிக்காதீர்கள் என்று கூறியதை தொடர்ந்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர் இளஞர்கள் செய்யும் அடாவடியை தனது கைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.  இதனை பார்த்த இளைஞர் கும்பல்  சிறப்பு சார்பு ஆய்வாளர்  செந்தில்குமாரை தாக்கியுள்ளனர். இதில் மயக்கம் அடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு முதல் உதவிக்காக  தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் படிக்க: நைட் வெடி போடறது கஷ்டம் போலயே.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தேனியில் நடந்தது என்ன?

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற சமதர்மபுரம் பகுதிக்கு வந்த காவல் துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன், கெளதம் சந்தேகப்படும்படியாக அப்பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர் கும்பலை தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளரை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதரி கூறுகையில், "சிறப்பு சார்பு ஆய்வாளர் சாதாரண உடையில் இருந்துள்ளார். பட்டாசு வெடித்து வீடியோ எடுத்த இளைஞர்களில் ஒருவரை பிடிக்க முயன்றபோது, ​​மற்றொருவனின் முழங்கையால் தாக்கப்பட்டதால் அவர் சரிந்து விழுந்தார். செந்தில் குமாருக்கு இதயம் தொடர்பான நோய்கள் இருந்து வந்தன. அவரது மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது" என்று கூறினார்.

மேலும் படிக்க: "தாங்களே வெடிகுண்டு வைத்து எடுப்பது போல".. திமுக-விற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

தீபாவளி திருநாளில் நடந்த கொலைகள்

நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொலைகள் நடந்துள்ளது. சென்னை வியாசர்பாடியில் 18 வயது இளைஞர் அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை  செய்யப்பட்டுள்ளார். தேனி சமதர்மபுரத்தில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட மோதலில் காவல்துறை எஸ்எஸ்ஐ படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் காட்டுப்பாளையம் அருகே மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருச்சி சமயபுரம் அருகே 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் கொலை  செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பிரபல ரவுடி விரட்டி விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அடையாளம் தெரியாத கும்பலால் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க: CBSE Board Exam 2027: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு.. முழு விவரம்!

திமுக கண்டனம்

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.

Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள். இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.

கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம். ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்? தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று கூறினார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES