SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CM விஜய்யின் பிளாஸ்ட் அறிவிப்பு - மருத்துவ காப்பீடு ரூ.25 லட்சம் ஆக உயர்வு...

CM Vijay Announcements In Assembly : முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீடு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

Written By Sudharsan G
Published: Aug 19, 2026, 09:44 AM IST | Updated: Aug 19, 2026, 11:08 AM IST
Join

CM Vijay 110th Annoucements In Assembly : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதமும்; நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலா உள்ளிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறுகிறது.

மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முன் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்தார். அதில் பல முக்கிய அறிவிப்புகளை இன்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அதில் மருத்துவத்துறை சார்ந்தும் பல கவனிக்க வேண்டிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அவை கீழ் வருமாறு:

பெரம்பூரில் மருத்துவமனை

வடசென்னை மக்களின் விரைவாக மருத்துவ சிகிச்சைக்காக, பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

 

காப்பீடு உயர்வு

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு ரூபாய் 5 லட்சத்தில் இருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

திருநங்கைகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருநங்கைகளுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி, கன்னியாகுமரி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

கூடுதல் மருத்துவர் மாணவர் சேர்க்கை

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.

தரமான மருத்துவ சேவைக்குத் தேவையான செவிலியர், மருத்துவியல் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில் 6 ஆயிரத்து 98 கூடுதல் மாணவர் இடங்கள் உருவாக்கப்படும்.

B.Sc செவிலியர் மாணவர்கள் 660 இடங்கள்;  செவிலியர் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கூடுதலாக 1,925 இடங்கள்; 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,778 மாணவர்கள் இடங்கள்; மருத்துவியல் படிப்புகளில் கூடுதலாக 735 கூடுதல் இடங்கள் என ஏழு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்.

புற்றுநோய் சிகிச்சை

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய்களைத் தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் 673 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்படும்.

முதற்கட்டமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.84 கோடியில் தரைத்தளம் மற்றும் 8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும்.

கூடுதல் அறிவிப்புகள்

ரோபோடிக் அறுவை சிகிச்சை Linear Accelerator (LINAC - நேர்க் கதிர்வீச்சு) கதிர்வீச்சு சிகிச்சை, நவீன கருவிகள், இலக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.106 கோடியே 17 லட்சம் வழங்கப்படும்.

1.22 லட்சம் பெண்களுக்கு HPV DNA பரிசோதனை தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.8 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

மருத்துவர்களுக்கு பயிற்சியும், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவும் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES