SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.4,000 டெபாசிட்.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

TN Government: விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.4000 வரவு வைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 08, 2026, 02:52 PM IST | Updated: Oct 08, 2026, 03:09 PM IST
Join

TN Govt: கரும்பு விலையை உயர்த்தி வழங்கவேண்டும் என்ற விவசாயிகளின் தொடர் கோரிக்கையினைப் படிப்படியாக நிறைவேற்றிடும் வண்ணம் வெற்றித் தமிழ்நாட்டில், இனிக்கும் கரும்பினை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைக் காத்திட,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் கரும்பிற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ஒன்றிய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.709.50 வழங்கப்படும் என அறிவித்தார்.

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.4000 ஊக்கத்தொகை

இதன் வாயிலாக கரும்பு விவசாயிகள், கரும்பு விலையாக டன் ஒன்றிற்கு ரூ.4,000 பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடிப் பரப்பு உயர்ந்து சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் மேம்படுவதுடன், சர்க்கரை மற்றும் உப பொருட்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரும்புக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ. 709.50 சிறப்பு ஊக்கத் தொகை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 2025-26-ஆம் ஆண்டு அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.709.50 வழங்குவதற்காக ரூ.603.34 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும் படிக்க; குடும்ப சொத்து ஆவணங்கள்.. காகிதமற்ற பதிவு முறை கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி

தமிழ்நாட்டில், 2025-2026 ஆம் ஆண்டு பருவத்தில் அரவைப்பணி மேற்கொண்டுள்ள 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 29 சர்க்கரை ஆலைகளில் 9.5 சதவீத சர்க்கரைக் கட்டுமானத்திற்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.3,290.50 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையான ரூ.709.50 யையும் சேர்த்து டன் ஒன்றிற்கு ரூ.4,000/- கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்க்கரைக் கட்டுமானம் 9.5 சதவீதத்திற்கு மேல் உள்ள கரும்பிற்கு அதற்கேற்ப ரூ.4000-க்கும் அதிகமாக கரும்பு விலை கிடைக்கப்பெறும்.

தமிழக அரசு அறிவிப்பு

மேலும், இந்த அரசாணையின்படி, 01.10.2025 முதல் 30.09.2025 வரை சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளின் கரும்பு எடை. ஆதார் எண், வங்கிக்கணக்கு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர்களின் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவினரால் சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு பரிந்துரைக்கப்பட்டு. செய்யப்பட்ட பின்னர் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையினால் ஒத்திசைவு செய்யப்பட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடிப் பணப்பரிவர்த்தனை வாயிலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து எதிர்வரும் தீபாவளிப் பண்டிகை முதல் தொடங்கப்படும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. இதனால் சுமார் 90,000 கரும்பு விவசாயிகள் பயனடைவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அக். 14 வரை கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையில் மழை பெய்யுமா? வானிலை அப்டேட்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES