SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மின்தடை பிரச்னையா? உடனடி தீர்வுக்கு வாட்ஸ் அப்பில் சூப்பர் வசதி.. புகார் எண் அறிமுகம்

TNEB Whatsapp Chatbot: மின்சார சேவை தொடர்பான புகார்களை எளிதாகப் பதிவு செய்ய 24 மணிநேரமும் செயல்படும் வகையில் புதிய “WHATSAPP CHATBOT” வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்தடை போன்ற புகார்களை எளிதாக அளிக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 03, 2026, 09:10 AM IST | Updated: Oct 03, 2026, 09:25 AM IST
Join

Tangedco WhatsApp Number: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. சென்னை உட்பட முக்கிய மாவட்டங்களிலு திடீர் மின்தடை இருந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை  தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக ஆட்சி சந்திக்கும் பிரச்னைகளில் மிக முக்கியமானது மின்வெட்டு உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மின்வெட்டு தொடர்பாக புகார்கள் எழுந்து வருகிறது. பல மணி நேரம் மின்வெட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.  இந்த நிலையில், தமிழக அரசு மின்வெட்டு தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புகார் எண் அறிவிப்பு

மின்துறை தொடர்பான சேவைகளுக்கு புகார் அளிக்க மின்வாரியம்  எண்ணை அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படியும், மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், பொதுமக்களின் மின்சார சேவை தொடர்பான புகார்களை எளிதாகப் பதிவு செய்து, அவற்றை விரைவாகவும் காலதாமதமின்றியும் உரிய அலுவலர்களிடம் கொண்டு சேர்த்து, விரைவான குறைதீர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 24 × 7 செயல்படும் புதிய "WHATSAPP TNEB CHATBOT" வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, மின்சார விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்த புகார்களை எளிதாக அளிப்பதற்கும் உரிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க; பல்டி பாமா... சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் பேச்சு - அமைச்சர்கள் கண்டனம்

இந்நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, மின்சார சேவைகள் குறித்த புகார்களை விரைவாகக் கையாளுவதற்கும், அவற்றை உரிய அதிகாரிகளிடம் காலதாமதமின்றி கொண்டு சேர்த்து, குறித்த காலத்தில் தீர்வு வழங்குவதற்கும் ஏதுவாக 24 x 7 செயல்படும் "TNEB CHATBOT" எனும் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

 

புகார் அளிப்பது எப்படி?

இந்த சேவையை பெற WHATSAPP செயலியில் 94987 94987 என்ற எண்ணிற்கு HI என பதிவிட வேண்டும். இதனையடுத்து அலைபேசி எண் அல்லது மின் இணைப்பு எண் மூலம் புகார் குறித்த விவரங்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, புகாரை சீர் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த தானியங்கி புகார் அளிக்கும் வசதியின் மூலம் பொதுமக்கள் மேலும் எளிதாகவும், விரைவாகவும் மின்சார சேவைகளை பெற ஏதுவாகும். மின்சார சேவை தொடர்பான பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து, சிறப்பான மின்சார சேவையை வழங்குவதற்கு தொடர்ந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மின்தடைக்கு காரணம் என்ன?

தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லை என்று கூறிய அமைச்சர் நிர்மல் குமார், கடந்த சில நாட்களாகவே காற்றாலை மின்சாரம் மூலம் பெறப்படும் மின்சாரம் சரிவர கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதனால், பல்வேறு மாவட்டங்களில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.  பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20  கொடுத்து வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். அக்டோபர் மாதத்தில் இருந்து நீண்ட கால ஒப்பந்தத்தின் மூலமாக மின்சார கொள்முதல் நடைபெறும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: TNSTC ஆன்மீக சுற்றுலா... 1 நாளில் 14 வைணவ கோவில்களுக்கு போகலாம்... கட்டணம் எவ்வளவு?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES