SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு! 6,574 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC Group 4 Notification 2026 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Written By Karthikeyan Sekar
Published: Oct 06, 2026, 10:13 PM IST | Updated: Oct 06, 2026, 10:22 PM IST
Join

TNPSC Group 4 Notification 2026 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), Group 4அறிவிப்பை 06.10.2026 இன்று வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

மொத்தக் காலிப் பணியிடங்கள் விவரம்: இத்தேர்வின் மூலம் பல்வேறு அரசுத் துறைகள், மாநகராட்சிகள், வாரியங்கள் மற்றும் கழகங்களில் உள்ள மொத்தம் 6,574 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  

முக்கியத் தேதிகள் மற்றும் கால அட்டவணை:

அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 06.10.2026  

இணையவழியில் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 06.10.2026  

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மற்றும் நேரம்: 05.11.2026 (இரவு 11:59 மணி வரை)

விண்ணப்பத் திருத்தச் சாளரம்: 09.11.2026 (மதியம் 12:01 மணி) முதல் 11.11.2026 (இரவு 11:59 மணி வரை)  

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 10.01.2027 (காலை 09:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை)

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:

கல்வித்தகுதி: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர் போன்ற பெரும்பாலான பதவிகளுக்குக் குறைந்தபட்சக் கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு/சுருக்கெழுத்து தேர்வுகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்குப் பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

வயது வரம்பு (01.07.2026 அன்றைய நிலவரப்படி):

பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 வயது (VAO பதவிக்கு 21 வயது) முதல் அதிகபட்சம் 30 அல்லது 32 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பி.வ, பி.வ (இ), மி.பி.வ / சீ.ம, ஆ.தி, ஆ.தி (அ), ப.ப ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினர் குறைந்தபட்ச பொதுக் கல்வித்தகுதியை விட அதிகமான கல்வித்தகுதியைப் (12th / Diploma / Degree) பெற்றிருந்தால் பெரும்பாலான பதவிகளுக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.  

விண்ணப்பிப்பது எப்படி?:

தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpscexams.in வழியாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

ஒருமுறைப் பதிவு: விண்ணப்பதாரர் ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருக்கவில்லை எனில், ரூ.150 கட்டணம் செலுத்தி தங்களது புகைப்படம், கையொப்பம் மற்றும் அடிப்படை விவரங்களுடன் ஒருமுறைப் பதிவை மேற்கொள்ள வேண்டும். மேலும் OTR கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

பதவிக்கு விண்ணப்பித்தல்: ஏற்கனவே OTR வைத்திருப்பவர்கள் தங்களின் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழைந்து குரூப் 4 தேர்வுக்கான "Apply" பொத்தானை அழுத்த வேண்டும்.

விவரங்களை நிரப்புதல்: கல்வித்தகுதி, இருப்பிடம், இடஒதுக்கீடு PSTM, ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி போன்றவற்றையும் மற்றும் தேர்வு மையங்களுக்கான மாவட்டங்களைச் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும்.

புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம்: வெள்ளை நிறப் பின்னணியில், கீழே தேர்வரின் பெயர் மற்றும் படம் எடுக்கப்பட்ட தேதி அச்சிடப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை குறிப்பிட்ட அளவில் பதிவேற்ற வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.100/- இணைய வங்கி, பற்று அட்டை, கிரெடிட் கார்டு அல்லது UPI முறையில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி கட்டண விலக்கு சலுகைகள் உண்டு.

சரிபார்த்து சமர்ப்பித்தல்: அனைத்து விவரங்களையும் முன்னோட்டம் பார்த்து உறுதி செய்த பின் "Submit" செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை எதிர்காலப் பயன்பாட்டிற்குப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேர்வுத் திட்டம் மற்றும் பாடத்திட்டம்:

இத்தேர்வு ஒரே ஒரு தாள் கொண்டதாக OMR முறையில் 200 வினாக்களுடன் (300 மதிப்பெண்கள்) 3 மணி நேரம் நடைபெறும்.

பகுதி - அ: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (பத்தாம் வகுப்புத் தரம்) – 100 வினாக்கள் (150 மதிப்பெண்கள்). (இதில் குறைந்தபட்சம் 40% அதாவது 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம்).

பகுதி - ஆ: பொது அறிவு (பத்தாம் வகுப்புத் தரம்) – 75 வினாக்கள்.

பகுதி - இ: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude, Mental Ability) – 25 வினாக்கள்.

கடைசி நேர சர்வர் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தகுதியுடைய தேர்வர்கள் கடைசி நாள் (05.11.2026) வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES