தீய சக்தி திமுக; கொத்து பரோட்டா.. கக்கூஸ் லீடர்! பேருந்து போர்டில் சர்ச்சைககுரிய வாசகம்.. வைரல் வீடியோ!
TNSTC Bus Viral Video: தமிழக அரசு பேருந்தின் டிஜிட்டல் போர்டில் சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஓம் சக்தி, பராசத்தி, திமுக ஒரு தீயசக்தி போன்ற வாசகங்கள் அரசு பேருந்தின் டிஜிட்டல் போர்டில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
TNSTC Bus Viral Video: தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து, திமுகவை கடுமையாக சாடி வருகிறார். தேர்தலுக்கு முன்பும் திமுகவை மட்டுமே டார்க்கெட் செய்த வந்த நிலையில், தற்போது அதையே முதல்வர் விஜய் செய்து வருகிறார். கட்சி மேடைகளில் எல்லாம், திமுகவை சீண்டி வருகிறார். அதேபோல, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
திமுகவுக்கு எதிரான வாசகங்கள்
சட்டப்பேரவையில் கூட, அப்பாவை காணோம் போன்றவற்றை முதல்வர் விஜய் கிண்டலடிக்கும் வகையில் பேசினார். மேலும், தேர்தல் பிரச்சார நேரத்தில் கௌத்தூரில் கொத்து பரோட்டா என ஸ்டாலின் குறிப்பிட்டு விமர்சித்தார். அதேபோல, ஓம் சக்தி பராசத்தி, திமுக ஒரு தீயசக்தி என்றே கூறி வருகிறார். மேலும், அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உதயநிதி ஸ்டாலினை டார்க்கெட் செய்து, பாத்ரூம் லீடர் என விமர்சித்து வருகின்றனர்.
சட்டப்பேரவையில் கூட இவ்வாறு அவர்கள் விமர்சனம் செய்து இருக்கின்றனர். இப்படியாக சட்டப்பேரவை, கட்சி கூட்டத்தில் மட்டுமே பேசி வந்த இவர்கள், தற்போது அதனை வாசகமாக அரசு பேருந்தில் போடப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அரசுப் பேருந்தின் டிஜிட்டல் போர்டுகளில் வழக்கமாக ஊர் பெயர்கள் இடம்பெறும். அதேபேல, வெற்றி பயணம் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும்.
மேலும் படிக்க: திருச்சி : தீபாவளி இனிப்பு தயாரிப்பு - தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய எச்சரிக்கை
வைரல் வீடியோ
ஆனால், புதுச்சேரியில் இருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்தின் ஒன்றில் டிஜிட்டல் போர்டில் ஓம் சக்தி பராசக்தி.. திமுக ஒரு தீயசக்தி, கக்கூஸ் லீடர் உதயநிதி, கொளத்தூர் கொத்து பரோட்டா ஸ்டாலின் அங்கிள், எங்க உங்க அப்பாவை காணோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அரசு பேருந்தின் டிஜிட்டல் போர்டுகளில் இதுபோன்ற வாசகங்கள் இடம்பெற்றிருப்பதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், திமுகவினர் கடுமையாக சாடி வருகின்றனர். எதிர்க்கட்சியாக எதிராக இதுபோன்ற வாசகங்களை அரசு பேருந்தில் இடம்பெற்றிருப்பது கேவலமான செயல் என திமுகவினர் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதற்கு தமிழக போக்குவரத்து கழகம் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும் டிஜிட்டல் போர்டில் இவ்வாறு வாசகங்களை போட்டது என்பது குறித்து போக்குவரத்துதுறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். மேலும், பேருந்து, நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.