SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

TN Govt Trust Exam Scholarship: தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST 2026-2027) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள். எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 21, 2026, 10:19 AM IST | Updated: Oct 21, 2026, 10:29 AM IST
Join

TN Govt Trust Exam Scholarship: தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதற்தோறும உதவித்தொகை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இலவச  சைக்கிள் என பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.   அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை தமிழக அரசு வழங்குகிறது. அதாவது,  பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை  மேம்படுத்தும் வகையில், மாநில மதிப்பீடூட புலம் என்ற பெயரில் ஊரக திறனாய்வு தேர்வுகள் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஊரக திறனாய்வு தேர்வு

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் ஊரக திறனாய்வு தேர்வு  ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கிராமப்புற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.  இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுககு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை சென்னையை தவிர்த்து, ஊரக பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

அந்த வகையில், ஊரக திறனாய்வு தேர்வு (TRUST Exam 2026-27) கிராமப்புற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க: பைனான்ஸ் வித் ஹரிஷ் தற்கொலை: சைபர் புல்லியிங் காரணமா? நடந்தது என்ன?

விண்ணப்பிப்பது எப்படி?

ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 13ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாணவர்களின் நலன் கருதி அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில், விண்ணப்பிக்கும் அவகாசத்தை பள்ளிக்கல்வித்துறை நீடித்தது. அதன்படி, அக்டோபர் 21ஆம் தேதியான இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. எனவே, ஊரக திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வுக்கான கட்டணமாக ரு.5 மற்றும் சேவை கட்டணமாக ரூ.5 என மொத்தமாக ரூ.10 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்ப படிவத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும்.

ஊரக திறனாய்வுத் தேர்வுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரூ.1,000 உதவித்தொகை

ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு  9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு மாதற்தோறும் வழங்கப்படும். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி மாணவர்கள் இன்றே விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை: சென்னைக்கு Flash Flood அபாயம்? IMD எச்சரிக்கை
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES