SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: CM விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசின் சாதனைகளும், சோதனைகளும்.. முழு லிஸ்ட்!

TVK Vijay Government 100 Days: முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், தவெக ஆட்சியின் 100 சாதனைகளும், சர்ச்சைகள் பற்றியும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Aug 17, 2026, 10:59 AM IST | Updated: Aug 21, 2026, 04:32 PM IST
Join

TVK Vijay Government 100 Days Explained: 2026 தமிழக சட்டமன்ற தேர்தல்  என்பது எதிர்பார்ப்புகளை பெரிதும் கிளப்பியது. 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாற்றில் மறக்க முடியாத தேர்தலாக அமைந்தது. 60 ஆண்டுகள் தமிழகத்தில் ஆண்ட இருபெரும் திராவிட கட்சிகள் வீழ்த்தப்பட்டு, முதல்முறையாக தேர்தலில் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 233 தொகுதிகளில் போட்டியிட்டு, 108 இடங்களில் தவெக வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.

தவெகவின் 100 நாள் ஆட்சி

கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றார். தவெக ஆட்சி அமைந்து, இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. அரசியலில் முன் அனுபவம் இல்லாத விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்றது பலருக்கு இவர் எப்படி ஆட்சி இருக்கும் என்ற கேள்வி இருந்தது. வழக்கமாக புதிய ஆட்சி வந்தால், நிர்வாகம், அரசியல் சவால்களை  எதிர்கொள்ள வேண்டி இருக்கும். 

எனவே, அவற்றை கையாள ஆளுங்கட்சிக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுக்கும். ஆனால், அத்தகைய அவகாசம் இந்த கட்சிக்கு எதுவுமின்றி, தவெகவின் ஆட்சியின் முதல் நாளில் இருந்தே பல்வேறு சவால்களையும், பிரச்னைகளையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டுள்ளது.  இந்த நிலையில், இன்றுடன் தவெக ஆட்சி அமைந்து 100 நாட்களை கடந்த நிலையில், தவெக ஆட்சியின் சர்ச்சைகள், சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

தவெக ஆட்சியின் சாதனைகள் என்ன?

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற அன்றே சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை, 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்கு கையெழுத்திட்டார்.  எனவே, 100 நாள் ஆட்சியில் தவெக கொண்டு வந்த திட்டங்கள் குறித்த பார்ப்போம்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்  நோக்கில், முதல்வர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி போலீசார், ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், அதற்கு தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைகள் காலை முதல் இரவு வரை ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர்.

200 யூனிட் இலவச மின்சார திட்டம்

முதல்வர் விஜய் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் மின் கட்டணம்  500 யூனிட்டுகள் அல்லது அதற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் தகுதியான குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 500 யூனிட்டுக்கு  மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

717 மதுபான கடைகள் மூலம்

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், ஆன்மீக தலங்களுக்கு அருகில் இருக்கும் மதுபான கடைகளை மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டு, 700க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை தவெக அரசு மூடியது.

 

 

1 லட்சம் கோடி முதலீடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த  ரூ.67,452 கோடி முதலீடு  மற்றும் 1.06 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளை தவெக அரசு ஈர்த்துள்ளது.

போதைப் பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க சிறப்பு அதிரடிப்படை

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க 65 சிறப்பு அதிரடிப் படைகள் அமைக்க, 264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு போதைப் பொருள் சிறப்பு படை என மொத்தம் 37 படைகள் செயல்பட்டு வருகிறது.

தங்க மோதிரம் திட்டம்

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' செப்டம்பர் 15ஆம் தேதி அன்று அண்ணாவின் பிறந்தநாளில் தொடங்கப்படுகிறது.

அண்ணன் சீர் திட்டம்

பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்திற்கு  ரூ.812 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இத்திட்டம் பெருமளவில் உதவியாக இருக்கும்.

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

தமிழக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவை செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுககு விரிவுப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது. மேலும், முதல்வரின் காலை உணவு திட்டம் என பெயர் இருந்த நிலையில், அதனை காமராஜர் காலை உணவு திட்டம் என  தவெக அரசு பெயர் மாற்றியுள்ளது.

சிறப்பு ஊக்கத்தொகை

கரும்பு, நெல்லுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் அறிவித்தார். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இவையெல்லாம் தவெக அரசின் சாதனையாக இருக்கும் நிலையில், சர்சைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சர்ச்சைகள் என்ன?

குதிரை பேரம் புகார் 

நியமன விவகாரம் 

பத்திரிகையாளர்களை  சந்திக்காதது 

மின்வெட்டு 

பழனி நில முறைகேடு  

பழனி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், போலி ஆவணங்கள் மூலம் தனிநபர் பெயருக்கு மாற்றப்பட்ட நில முறைகேடு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

சொத்து வரி உயர்வு 

சென்னை சொத்து வரி  3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது. எந்த வித காரணமும் இன்றி, முன்னறிவிப்பும் இனிற திடீரென சொத்து உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிரிச்சி அடைந்தனர். இதற்கு கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, அந்த நோட்டீஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சட்ட ஒழுங்கு பிரச்னை 

தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும், கொலை, கொள்ளை சம்பவங்களும், போதைப் பொருள் பழக்கமும் இருந்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.  

தவெகவின் ரிலீஸ் சர்ச்சை 

 தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து பள்ளிகளில் தவெக நிர்வாகிகள் ரிலீஸ் செய்வது, விஜய் படத்தை வகுப்பறையில மாற்றுவது போன்ற அட்ராசிட்டிகளில் ஈடுபடுகின்றனர். மேலும், விருதுநகரில் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா சென்று மாணவியிடம் ஆங்கிலத்தில் பேச கூறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES