SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

கடந்த சில நாட்களாகவே கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. இதற்கு, தமிழக அரசு ஐகோர்டில் முன் வைத்துள்ள வாதம் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 23, 2026, 12:35 IST | Updated: Nov 23, 2026, 13:00 IST
Image Credit: Arul Vignesh | Source : X Page
Join

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட அட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், நீதிபதிகள் முக்கிய கருத்தை தெரிவித்திருக்கின்றனர்.

புகார் விவரம்

சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தி தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளி வந்துள்ளதாக கூறியுள்ளார். 

எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கும் உத்தரவிட வேண்டும், டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து பத்திரப்படுத்த உத்தரவிட வேண்டும் என, மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு முன்வைத்த வாதம்..!

கள்ளக்குறிச்சி தவெக (TVK) சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பெண் ஐஏஎஸ் அதிகாரி எவரும் தலைமைச் செயலாளரிடமோ அல்லது வேறு எந்த அதிகாரியிடமோ புகார் அளிக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணனிடம் தெரிவித்தார். வழக்கறிஞர் ஆர். திரிசூலி தாக்கல் செய்த குற்றவியல் மனு மீதான விசாரணையின்போது அவர் இவ்வாறு கூறினார். மனுதாரரின் புகாரின் அடிப்படையில், அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

"அந்த சட்டமன்ற உறுப்பினர், பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பினார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்களிடம் அதற்கான உறுதியான ஆதாரங்கள் என்ன உள்ளன? செய்தித்தாள் செய்திகளின் அடிப்படையில் நீங்கள் செயல்படலாம், ஆனால் என்னால் அவ்வாறு செய்ய முடியாது. ஒரு ஐஏஎஸ் அதிகாரியால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாதா? மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்காத நிலையில், காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று நீதிபதி மனுதாரரின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தலைமைச் செயலாளரிடம் மீண்டும் சரிபார்த்து, அது குறித்த தகவலை நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் கேட்டுக்கொண்டார். வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து..!

இந்த வழக்கு விசாரணையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முக்கிய கருத்தினை தெரிவித்திருக்கின்றனர். இந்த வழக்கில், ஒருவேளை ஆபாச குறுஞ்செய்தி அந்த மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பபட்டிருந்தால், அது அவருக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று சொன்ன நீதிபதிகள், கள்லக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் உரிய பதிலை பெற்று, நாளைக்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க | நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES