வெற்றி மகளிர் கடன் திட்டம்: ரூ.5 கோடி வரை கடனுதவி.. யாருக்கெல்லாம்? எப்படி பெறுவது? Explained
Vettri Women Entrepreneur Scheme Explained: பெண்கள் தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. வெற்றி பெண் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து விவரத்தை பார்ப்போம்.
Vettri Women Entrepreneur Scheme Explained: தமிழகத்தில் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. பெண்கள் சுயதொழில் தொடங்கவும், அவர்களின் பணிக்காவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பெண்கள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், தவெக அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் 'வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' கொண்டு வரப்படும் என அறிவித்தது.
வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பில் வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி, சேவை துறைகளில் புதிய தொழில்களை பெண்கள் துவங்கவும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுப்படுத்தவும் நிதியுதவி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிலம் வாங்குவதல், கட்டிடங்கள் கட்டுவது, இயந்திரங்கள் வாங்குவதற்கும் போன்ற செலவுகளுக்கு கடன் நிதியுதவி வழங்கப்படுகிறது. எனவே, தொழில் செய்ய விருப்ப உள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பக்கலாம்?
தவெக அரசு பட்ஜெட்டில் அறிவித்த திட்டமான, வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள்
- மகளிர் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 51 சதவீதம் பங்குரிமையைக் கொண்டிருக்க வேண்டும்.
- தனியுரிமை/ ஒரு மனித நிறுவனங்கள் (Proprietary/ One Person Company) கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
- கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை நிறுவனங்கள் (Partnership/ LLP Firms)
- தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (Private/ Public Ltd Company) வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர தகுதிகள்
- பெண்கள்/ மூன்றாம் பாலினத்தவர்கள் தொழில்முனைவோருக்கானது.
- வயது: 18 முதல் 55 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்
- குடும்ப ரேஷன் கார்டு கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆக இருக்க வேண்டும்.
- கல்வித்தகுதி தேவையில்லை, வருமான வரம்பு எதுவும் இல்லை.
- ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே ஒருவருக்கு மட்டுமே அனுமதி.
- முன்னுரிமை பயனாளிகள்: பட்டியலினத்தவர்/ பழங்குடியினர், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள்/ ஆதரவற்ற விதவைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் (BPL) உள்ள பெண்கள்.
முதல்முறை தொழில் தொடங்குபவர்களுக்கு சூப்பர் வசதி
வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் முதல்முறையாக தொழில் தொடங்கும் பெண்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development And Innovation Institute) மூலம் முதல்முறை முனைவோர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் தொகை உச்ச வரம்பு
வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 லட்சமும் கடனுதவி வழங்கப்படும். அதிகபட்சம் ரூ.5 கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் பங்களிப்புத் தொகையை பொறுத்தவரை, புதிய நிறுவனங்கள் திட்ட செலவில் 20 சதவீதம் ழவழங்க வேண்டும். ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் திட்டச் செலவில் 15 சதவீதம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் பங்கு விகிதம் 4:1 என்ற அடிப்படையில் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம்
இத்திட்டத்தில் கடனுதவி பெறும் தொழில் முனைவோர் முதன்மை கடன் வட்டி விகிதம் (Prime Lending Rate) தற்போது ஆண்டுக்கு 9.96 சதவீதம் இருக்கிறது. கடனை மாதத்தவணை அடிப்படையில் திருப்பிச் செலுத்த வேண்டும். வாங்கிய கடனை 9 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். 2 ஆண்டுகள் வரையிலான தவணை ஒத்திவைப்பு காலம் இருக்கிறது. எனவே, கடன் பெற்ற 2 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் தவணைத் தொகையை செலுத்த தொடங்கலாம். கடன் பெறுபவர்ள் Cibil MSME தரவதிசை 7க்கும் குறைவாகவும், தனிநபர் சிபில் மதிப்பெண் 600க்கும் அதிகமாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணையும் வழங்கும் விதிமுறை
- புதிய மற்றும் 3 ஆடுகளுக்கும் குறைவாகவே செயல்பட்டு வரும் தொழில நிறுவனங்கள் கடன் தொகையில் 40 சதவீதம் மதிப்பிலான அசையா சொத்தை பிணையமாக வழங்க வேண்டும்.
- 3 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல செயல்பாட்டுடன் இயங்கி வரும் நிறுவனங்கள் 20 சதவீதம் அசையாச் சொத்து பிணையம் வழங்க வேண்டும்.
முன்கூடியே செலுத்த வேண்டிய கட்டாயம்
இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் கடன்களுக்கு ஆய்வுக்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. கடன் தொகையில் 0.25 சதவீதம் சலுகை கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
- கடன் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் MSME Online TN அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள "இணைய வழி விண்ணப்பிக்க" (Apply Online) என்ற பொத்தானைக் கிளிக் செய்து, உங்களின் அடிப்படை விவரங்களை உள்ளிட்டு புதிய கணக்கை உருவாக்க வேண்டும்
- உள்நுழைந்த லாகின் பிறகு, உங்களின் தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி, நீங்கள் தொடங்கவிருக்கும தொழில் சார்ந்த திட்ட அறிக்கை போன்ற விவரங்களை நிரப்பவும்.
- கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை ஸ்கேன் பிடிஎஃப் அளவில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
- அனைத்து விவரங்களை சரிபார்த்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் சமர்ப்பித்த பிறகு வரும் ஒப்புதல் சீட்டை எதிர்காலத் தேவைக்காகப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்
பதிவேற்ற வேண்டிய ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- ரேஷன் கார்டு
- திட்ட அறிக்கை
- சாதிச்சான்றிதழ்
- இடமாற்றச் சான்றிதழ் / SSLC / HSC / டிப்ளமோ / பட்டச் சான்றிதழ் (கட்டாயமல்ல).
- விற்பனையாளர் GST எண்ணுடன் கூடிய விலைப்புள்ளி
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
- வங்கி இருப்புக் கையேடு.
- மாற்றுதிறனாளிகள் / மூன்றாம் பாலினத்தவர்/ விதவைகள்/ ஆதரவற்ற விதவைகள்/ வறுமைக் கோட்டுக்கு கீழ் ஆகியோருக்கான சான்றிதழ் (சிறப்பு வகை நபர் மட்டும் பதிவேற்ற வேண்டும்).
கேள்வியும் பதிலும்
தொழில் முனைவோர் மேட்பாட்டு பயிற்சி கட்டாயமா?
ஆம். தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி கட்டாயம் தேவைப்படுகிறது.
2. வேற அரசு திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகள் இத்திட்டத்தில் கீழ் கடன் பெற இயலுமா?
வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்பும் பயனாளிகள் இதற்கு முன்பு மத்திய/மாநில அரசின் திட்டங்களில் கடன் பெற்றிருக்க கூடாது.
3. இத்திட்டத்தின் கீழ பயனாளிகள் தேர்வு செய்யப்படும் முறை என்ன?
சம்பந்தப்பட்ட மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் சென்னை மண்டல இணை இயக்குநர் தலைமையிலான மாவட்ட பணிக்குழுவால் நேர்காணல் செயல்முறை மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.