• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தளபதி To முதலமைச்சர்.. விஜய்யின் 17 ஆண்டுகால அரசியல்! திராவிட கோட்டையை உடைத்தது எப்படி?

தளபதி To முதலமைச்சர்.. விஜய்யின் 17 ஆண்டுகால அரசியல்! திராவிட கோட்டையை உடைத்தது எப்படி?

விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கி வெறும் இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தார் என்றுதான் நாம் நினைத்து வருகிறோம். ஆனால் இதற்காக அவர் 17 ஆண்டுகளுக்கு முன்பாகவே அடித்தளம் போட தொடங்கி இருக்கிறார்.

Reported ByR BalajiEdited ByR Balaji
Published: Aug 07, 2026, 06:16 PM IST|Updated: Aug 07, 2026, 07:03 PM IST
joinshare
தளபதி To முதலமைச்சர்.. விஜய்யின் 17 ஆண்டுகால அரசியல்! திராவிட கோட்டையை உடைத்தது எப்படி?
Image Credit: Image Source: X

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

2

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

3

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

4

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

5

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

முதலமைச்சர் விஜய் தனது 52 வது பிறந்தநாளை கடந்த ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடினார். அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விஜய்யின் வாழ்க்கை பயணம் அனைவரையும் தற்போது மீண்டும் பேச வைத்திருக்கிறது. குறிப்பாக கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் முதலமைச்சர் ஆகி காட்டிருப்பது அனைவரையும் ஆட்சரியப்படுத்தி உள்ளது. ஆனால் அவரது அரசியல் பயணம் ஈடுபாடு என்பது கிட்டத்தட்ட 2008 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்துள்ளது. தனது எதிர்கால அரசியல் வாழ்க்கையை அவர் அப்போதில் இருந்தே தொடங்கி இருக்கிறார். அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனாக தொடங்கிய அவரது திரைப்பயணம், காலப்போக்கில் அவருக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது.. இல்லை, விஜய் அதனை உருவாக்கி கொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் அவரது நடிப்பு, தோற்றத்தை கிண்டல் செய்த பலர் பிற்காலத்தில் வாய் திறக்க ஆச்சரியப்பட வைத்தது. அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்ற வரிசையில் விஜய் - அஜித் என்ற காம்போவும் உருவானது. இந்த சூழலில்தான், விஜய் தனது அரசியல் நகர்வை தொடங்கினார். கிட்டத்தட்ட 17 ஆண்டு கால பயணமே அவரை இன்று முதலமைச்சர் ஆக்கி இருக்கிறது எனலாம்.

இலங்கை தமிழர்களுக்காக 2008ல்

2008 ஆம் ஆண்டில் இலங்கை ராணுவத்தால் இலங்கை தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் விஜய் தனது தாய், தந்தையுடன் கலந்து கொண்டார். அவரது ரசிகர்களும் அந்த போராட்டத்தில் பங்கேற்று கொண்டனர்.

2009 - விஜய் மக்கள் இயக்கம்

இதையடுத்து விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். இந்த அமைப்பின் மூலம் அவரது ரசிகர்கள் பொதுமக்கள் இரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வந்தனர்.

2011 - அண்ணா ஹசாரே உண்ணாவிரத போராட்டம்

2011ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தில் விஜய் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

தமிழக மீனவர்களுக்காக களத்திற்கு வந்த விஜய்

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்வதை கண்டித்து தூத்துக்குடியில் மிக பெரிய போராட்டம் நடந்தது. அதில் விஜய் பங்கேற்று பேசினார்.

அனிதா குடும்பத்தினருக்கு ஆறுதல்

2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்காததால் தனது மருத்துவ கனவு நிராசையானது என்பதால் மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சூழலில், விஜய், அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விஜய்

கடந்த 2017 ஆம் ஆண்டில் சென்னை மெரினாவில் மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. அதில் விஜய் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

ஸ்டரைலைட் ஆலைக்கு எதிரான போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டரைலைட் ஆலைக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது. குறிப்பாக தென்னிந்திய நடிகர்கள் சார்பாக நடத்திய போராட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். அதேபோல் இந்த போராட்டத்தின் போது நடந்த தூப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு

10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசு கொடுத்து பாராட்டினார். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இப்படி பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட பிறகே விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில், இதுவரை திராவிட கட்சிகளின் கோட்டையாக இருந்த தமிழ்நாட்டை தன் வசம் ஆக்கி உள்ளார் விஜய்.  
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy